“சிங்கம் ஒன்று புறப்பட்டதே…
மழைகாலம் தொடங்கிடுச்சு…
நல்ல நேரம் பிறந்திடுச்சு……”
என்று முணுமுணுத்தபடியே மண்புழு ஒன்று மாரகழி மாதம் பொழிந்து தள்ளிய மாரி மழையால் அரிகண்ட விலாஸ் அலுவா போல பதமாக இருந்த மண்ணுக்குள் தன் நெடிய உடலை நீட்டியும் சுருக்கியும் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது….
சதக்..
முணுமுணுத்த பாடலையும் கூடவே இழுத்து நீட்டிய தன் உடலையும் சட்டென்று நிறுத்தினார் புழுவானவர்.
அது ஒரு மண்வெட்டி, கொத்திய கொத்தில் மயிரிழையில் தப்பியிருந்த புழுவானவரை அப்படியே மண்ணோடு சேர்த்து புரட்டி வெளியில் போட்டிருந்தது.
புழுவானவர் இப்போது புது உலகத்தில் இருந்தார் …மண்ணுக்கு வெளியே….. ஆபத்து எந்த ரூபத்திலேயும் எங்கிருந்தும் வரலாம்… மணவெட்டியின் அடுத்த கொத்தில் துண்டு துண்டாகப்போகிறாரோ அல்லது எங்காவது பசியுடன் பறந்து திரியும் பறவைகளுக்கு இரையாகப்போகிறாரோ எனபதை புழுவானவர் அறிய மாட்டார்…..
ஊய்……..என்று உடலை ஒரு தடவை சிலிர்த்து விசிலடித்தவருக்கு முன்னால் வியப்பு விரிந்து கிடந்தது.. “அய் நாம எங்கே இருக்கோம்…? இந்த உலகம் ரொம்ப நல்லாருக்கே..! யாரு தலைய இங்க கொணாந்து போட்டான்..?
என்று மனதுக்குள் ருவீற் பண்ணிக்கொண்டு இருந்த புழுவானவரின் கவனத்தை, இவரது திருவுருவத்திறகு முன்னால் அசைந்த இவரைப்போன்ற ஒரு புழுவின் உருவம் கலைத்தது.
“அட இது யாரு..?… நம்ம ஆளு ஒண்ணு.. எனக்கு முதலே இங்க ஆஜராகியிருக்கார் … அய் அதுவும் பொண்ணு…. இதப்பார்ரா… இதைதான் ராஜ யோகம்ன்னு சொல்லுவாங்களோ…? என்னையும் அனுப்பி ..எனக்கு பின்னால ஒரு பெண்ணையும் அனுப்பி இருக்காங்க…”
தொடர்ந்து ருவீற் அடித்துக்கொண்டிருந்தார் புழுவானவர்.
……ம்..ம்…
“நேரத்தை வீணாக்காத மச்சி எவனாவது உன்னை முந்திடப்போறான்..”
வினாடி நேரத்தை கூட வீண்டிக்க விரும்பாத புழுவானவர் உடனடியாகவே செயலில் இறங்கினார்..
“ஏய்..ஏய்.. ஐ லவ்யூடி செல்லம்….”
“………………………..” மறு முனையிலோ மயான அமைதி..
'”ம் .. என்ன இது ஒரு அசுமாத்தத்தையும் காணல ஒரு வேளை ஐட்டத்துக்கு ஆங்கிலம் தெரியாதோ… ஹ..ஹ.. ஹா… நல்ல தமிழில் ஒண்ணு எடுத்து விடுடா சோமாரி…”
சிறிது நேரம் சிந்தித்த புழுவானவர் தனித்தமிழில் எடுத்து இயம்ப தொடங்கினார்……
“என் உயிர் மண்புளுவே…. !
என் அருமை பெண் புழுவே…!
நான் உன்னை காதலிக்கிறேன்..! நீ என்ன சொலகிறாய்..?
நிறுத்தி விட்டு மற்ற புழுவை உற்றுப்பாரத்தார் …..
“………………………..”
இந்த முறையும் அதே அமைதி
நம்ம புழுவானவருக்கு பொறுக்க முடியவில்லை…… கோபம் பொத்துக்கொண்டு வர…. வந்த கடுப்பை வாரத்தைகளில் காட்டினார்….
“கல்யாணந்தான் கட்டிகிட்டு ஊர்ந்து போலாமா…… ஊரந்து போயி கொஞ்ச புழு பெத்துக்கலாமா…”
மறு முனையில் மௌனம் கலைந்தது…
“அடேய் மட்டி முட்டாள் புழுவே…! நான் உன்ர மற்ற பக்கமடா….. மங்குனி பாண்டியா.. பொத்திக்கொண்டிருடா புண்ணாக்கு புழுவே அடுத்த மணவெட்டி கொத்து சிலவேளை உம்மேல தான் விழும் கவனம்…..”
அதிரந்து போன நம்ம புழுவானவர் நம்ப முடியாமல் ஒரு முறை தன் உடலை நன்றாக இழுத்துப்பாரக்க …..
இவ்வளவு நேரமும் இவர் காதல் செயது கொண்டிருந்த அந்த புழுவும் சேரந்து அசைந்தது..
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கதை வந்த காரணம்….
மண் புழுக்களில் ஆண் பெண் என்ற வேறுபாடு இல்லை . எல்லாம் ஒரே புழுதான் மண் புழுவைப்போலவே மனிதர்களும் இருந்து விட்டால்…
- காதல் என்ற கறுமம் இந்த உலகத்தில் இருந்திருக்காது.
ஒரு இயற்கையான நிகழ்வு ஒன்றுமே இல்லாத ஓர்மோன்களின் அட்டகாசத்திற்கு காதல் என்று பெயர் வைத்து மனிதர்கள் செய்யும் லீலைகள் கொஞ்சநஞ்சமல்ல. எது உணமையான காதல் எனபதற்கு ஏதாவது வரைவிலக்கணம் இருக்கிறதா இல்லை. இவ்வுலகில் காதல் என்ற பெயரில் அரங்கேறும் கறுமங்கள் தான் அதிகம்.
ஒரு பதினெட்டு வயது இளைஞ்ஞனுக்கும் ஒரு பருவ மங்கைக்கும் வருவது காதல் என்றால் ஒரு நடுத்தர வயது குடும்பஸ்தனுக்கு அடுத்தவன் பொஞ்சாதி மேல் வருவது என்ன..? இரண்டும் ஓர்மோனகளின் திருவிளையாடல்தான் எல்லாமே ஒண்ணுதான். சிம்பு நயனுடன் செய்ததும் காதல் தான் பிரபுதேவா நயனின் மேல் கொண்டதும் காதல்தான்.
காதல் ஒன்று மட்டும் இல்லாதிருந்து விட்டால் உலகத்திறகு இன்னும் எத்தனையோ சாதனையாளர்கள் கிடைத்திருப்பார்கள். காதலிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு செல்லிடப்பேசியை காதுக்குள் வைத்து செல்லும் இடமெல்லாம் பபா..குஞ்சு ..செல்லம்... என்று சிணுங்கி சிணுங்கியே அழிந்து போனவர்கள் பலர். உண்மையாக காதலிக்கிறோம், நாங்கள் லைலா மஜ்னு பரம்பரை என்று சொல்கிற எத்தனை பேர் தனியாக வீதியில் செல்லும் போது தன் காதலியை விட அழகான ஏன் சுமாரான ஒரு பெண்ணை கண்டால் சபலப்படாமல் இருந்திருக்கிறார்கள். கொஞ்சம் மனச்சாடசி, ஒழுக்கம், ரொம்மப பயம், உள்ளவர்கள் பார்வையோடு சரி. மற்றவர்கள் கதை கண்ராவிதான்.
- பெண்ணடிமை என்ற ஒன்று இருந்திருக்காது.
ஒரு ஆணும் பெண்ணும் உறவு கொண்டால் ஆம்பிளைக்கு ஒண்ணுமே இல்லை ஆனால் பெண்களின் கதை ஒரு கருவைச்சுமந்து குழந்தையை பெற்றெடுத்து அதறகு பாலூட்டி சீராட்டி வளரத்து எத்தனை வில்லங்கம் பெண்களுக்கு மட்டும். அதுவே தகாத உறவாக இருந்து ஒரு வேண்டாத கரப்பமாக போய்விட்டால் பெணகளின் நிலைமை அதோகதிதான். சட்ட பூரவமான கருக்கலைப்பு தடை செய்யப்பட்டிருக்கும் இலங்கை போன்ற நாடுகளில் பல பெண்களின் வாழக்கை சீரழிக்கப்பட்டு மரணத்தில போய் முடிந்திருக்கிறது. ஆனால் இதறகு காரணமான ஆண்கள் எங்கேயோ இன்னொரு அப்பாவி பெண்ணை கல்யாணம் செயது இன்னும் பல பெணகளின் வாழக்கையை கெடுத்துக்கொண்டு இருப்பார்கள்.
இவ்வாறு பெணகளுக்கு பாலியல் ரீதியாக சமூகத்தில் இருந்த ஆபத்து தான் பெண்ணடிமை என்பது தோன்ற காரணமாக இருந்திருக்கிறது. அதாவது பெண்கள் பாதுகாப்பு என்ற போரவையில் வீட்டிறகுள் ஒடுக்கப்பட்டிருந்தார்கள்.
இப்போது நிலைமை எவ்வளவோ மாறிவிட்டிருந்தாலும் பெணகள் ஏமாற்றப்படுவது ஒரு தொடர் கதையாகவே இருக்கிறது.
ஆக மண்புழுக்களைப்போல மனிதர்களுக்கும் ஆண் பெண் என்ற வேறுபாடு இல்லாவிட்டால் எந்த பிரச்சனையும் இருந்திருக்காது.
இரண்டும் போதும் என்று நினைக்கிறேன் நகைச்சுவையாக ஒரு கதைக்கு பின்னால் தீவிரமாக ஒரு விடயம். இது எனது பார்வை மட்டுமே உங்களின் கருத்துக்களை வரவேறகிறேன் பெணகளுக்கு ஜால்ரா அடிக்கிறேன் என்று ஆண்கள் யாரும் போர்க்கொடி தூக்கி விடாதீரகள். இன்னொரு விடயம் மண்புழு கதைக்குமா பாட்டுபாடுமா ன்னு யாராவது பின்னூட்டம் போட்டிக…… ;-p இதுதான் பதில் வரும்…