Sunday, November 29, 2009

*29-11-2009*--சிந்தனைச்சிதறல்கள்…….

புலவர் பலிகேசியின் டரியல்…
அகல்விளக்கின் டீ..டைம்….இன்னும் பல ……
எங்களுக்கு ஒண்ணு வேணாமோ…….அட…அதாங்க இது..!
ஓகே…..  --யாராவது இதுக்கு நல்ல தமிழ் சொல்ல முடியுமா--
விடயத்திறகு வருவோம்.

நன்றி…
கடந்த இரண்டு வாரங்களில் நண்பர்கள் என்னை ரொம்பவும் உணர்ச்சிவசப்பட வைத்துவிட்டார்கள்….

முதலாவதாக….

நண்பனுக்காக பதிவெழுதிய அக்கரைச்சீமை ஹொலிவூட் பாலா. அவருடன், அடிக்கடி குஜாலாக கும்மியடித்துக்கொண்டிருந்த யாழ் நணபர் ஒருவர் திடீரென மாயமாகிவிட அவரை தேடி பாலா எழுதிய பதிவு நெஞ்சை நெகிழ வைத்துவிட்டது. இறுதியில் பின்னூட்டங்களிலேயே நணபரும் கிடைத்து விட்டார். அவரது நடபு மேன்மேலும் தொடர வாழத்துக்கள்.

அடுத்தவர்..

அனபர் நான் சும்மா கிறுக்கி தள்ளிய கவிதைகளுக்கு தன்னுடய டரியலில் இடம் ஒன்று கொடுத்து என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். பலன் எனக்கு பல புதிய நணபர்கள் கிடைத்தாரகள்.  முக்கியமாக கலகலப்பிரியா இவரது பதிவுகள் என்னை ரொம்பவும் பாதித்தது.    உணமைகளை உச்சி மண்டையில் ஆணி   போல் அறைந்து விடுகிறது.

நடபுக்காக பதிவெழுதி நெகிழ வைத்த பாலா ….
புதிய நணபர்களை கொடுத்த புலவர்….
இருவருக்கும்….
combo2

கூகிளாண்டவர் தயவில் எனது அனபுப்பரிசு…

உதிர்ந்த பூக்கள்…

22112009355

இந்த பூக்களை தெரியுமா……இந்த பூமரம்  ஈழத்தின் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க இடத்தில் வாசனை வீசிக்கொண்டிருந்தது ….இப்பொழுதும் இருக்கும் என நம்புவோம்….இது என்ன பூ…? அந்த இடம் எது..?
அனேகமாக பின்னூட்டத்தில் விடைவரும்..


நல்ல பாட்டு கேட்டு…

ஏ.ஆர்.ரகுமான் ஹொலிவூட்டுக்கு போட்டார்…..விண்ணைத்தாண்டி வருவாயோ மாரகழி தான் வெளியாகிறது. ஹரிஸ் ஜெயராஜின் அடுத்த படம் என்னன்னு யாருக்கும் தெரியாது. யுவன் வர வர பாடல்கள் முனபோல் இல்லை வேற யாருடைய பாடல்களும் நம்பி தரவிறக்கம் செய்வது இல்லை. நல்ல பாட்டு கேட்டு ரொம்ப நாள ஆச்சு ….யாராவது ஏதாவது நல்ல பாட்டு கேட்டிருந்தால் சொல்லுங்கப்பா…இந்தி பாட்டுன்னாலும் பரவாயில்லை…யாம் மொழி கடந்த இசையை ரசிப்பவர்கள் ஸ்பானிஷ் பாட்டுன்னாலும் கேடப்போம்…

இது எப்பிடி இருக்கு…

இந்த வாரம் என்னவோ தெரியாது…..
பதிவை எழுதி முடிக்கும் போது உங்களுக்கு கஸ்டகாலம்.


பிரிவு....


bigstockphoto_Couple_In_Love_73114










உனைப்பார்த்த கண்கள் 
குருடாக இருந்திருக்கலாம்..
உன் குழலினிய குரலை கேட்ட செவிகள்
செவிடாக இருந்திருக்கலாம்
உன்னோடு இழைந்து இழைந்து நடந்த கால்கள்
முடமாக இருந்திருக்கலாம்
உன் ஸ்பரிசத்தை விழி மூடி ரசித்த மேனி
வெறும் சடமாக இருந்திருக்கலாம்
இத்தனையும் விட உனைப்பிரிந்த அக்கணமே
நான் பிணமாக விழுந்திருக்கலாம்.








18 comments:

கனககோபி said...

ஓகே எண்டுறுதுக்கு ஆங்கிலத்திலயே அர்த்தம் இல்லாதபோது தமிழில் தேடுவது அவ்வளவு புத்திசாலித்தனம் இல்லை நண்பரே.... ;)

புதிய நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்...

தொடர்ந்து உங்கள் கவிதை ஆறு பெருக்கெடுத்து ஓடட்டும்...

(கவிதையை பதிவில கட்டாயம் போடோணும் எண்டு ஒரு அப்பாவி மிரட்டிப் போட வச்சானே? ஞாபகம் இருக்கா?)

அந்தப்பூ எனக்குத் தெரியேல....

நல்ல பாட்டுக் கிடைச்சா எனக்கும் சொல்லுங்கோ....


கவிதை கவிதை....
ம்...
கவனமா இருங்கோ....
ஆப்புகள் கண்ணுக்குத் தெரிவதில்லை.

பிரியமுடன்...வசந்த் said...

//உனைப்பார்த்த கண்கள்
குருடாக இருந்திருக்கலாம்..
உன் குழலினிய குரலை கேட்ட செவிகள்
செவிடாக இருந்திருக்கலாம்
உன்னோடு இழைந்து இழைந்து நடந்த கால்கள்
முடமாக இருந்திருக்கலாம்
உன் ஸ்பரிசத்தை விழி மூடி ரசித்த மேனி
வெறும் சடமாக இருந்திருக்கலாம்
இத்தனையும் விட உனைப்பிரிந்த அக்கணமே
நான் பிணமாக விழுந்திருக்கலாம்.
//

அசால்ட்டு மாமு...
மிகவும் பிடித்திருக்கிறது...

Balavasakan said...

ஓகே...ம்..ம்..இதற்கு பதிலாக பாவிக்க கூடிய தமிழ் வார்த்தை...?

தகவலுக்கு நன்றி கோபி

//கவிதை கவிதை....
ம்...
கவனமா இருங்கோ....
ஆப்புகள் கண்ணுக்குத் தெரிவதில்லை//

தெரியாவிட்டாலும் இது ஒண்ணும் புதிதல்ல ....

Subankan said...

அந்தப்பூ பவளமல்லி, சரியா? இருந்த இடம் தெரியவில்லை.

வாழ்த்துகள் வைத்தியரே, கவிதையில் கரை கண்டுவிட்டுத்தான் மறுவேலை போல?

சிந்தனைச்சிதறல்கள் - பெயர் நல்லாயிருக்கு.

அகல்விளக்கு said...

பிரிவினுடைய துயர் ரொம்ப பாதிக்கிறது நண்பா...

கவிதை உங்களுக்கு நல்லா வருது நண்பா... நியைய எழுதுங்கள்..

வானம்பாடிகள் said...

கவிதை நல்லாருக்கு!

கலகலப்ரியா said...

beautiful! ty.. bala? surya? or vasu? ..

புலிகேசிக்கு எனது நன்றிகளும் பல..! உன் பக்குவமும்... எழுத்தும்.. யாழ்ப்பாணம் என்ற மாயச்சொல்லும் சட்டென ஒரு நெருக்கத்தை உருவாக்கியதில் வியப்பேதும் இல்லை..! ரொம்ப சந்தோஷம்..!

கலகலப்ரியா said...

//இது என்ன பூ…? அந்த இடம் எது..?//

பதில் மறக்காம சொல்லிடு..! :)

Balavasakan said...

-நன்றி வசந்த்
-நன்றி சுபாங்கன்
-நன்றி அகல் விளக்கு
-நன்றி வானம்பாடிகள்

Balavasakan said...

//கலகலப்ரியா said...
beautiful! ty.. bala? surya? or vasu?//

அப்பா பெயர்-பாலசூரியன்
நான்-வாசகன்
இரண்டும் சேரத்து-பாலவாசகன்
நணபர்கள் அழைப்பது-வாசு


புலிகேசிக்கு எனது நன்றிகளும் பல..! உன் பக்குவமும்... எழுத்தும்.. யாழ்ப்பாணம் என்ற மாயச்சொல்லும் சட்டென ஒரு நெருக்கத்தை உருவாக்கியதில் வியப்பேதும் இல்லை..! ரொம்ப சந்தோஷம்..//

நன்றி அக்கா..

archchana said...

பதிவில் இரண்டு இடங்கள் என்னை மிகவும் பாதித்துவிட்டது.
ஒன்று .........உதிர்ந்த பூக்கள்
இரண்டு பிரிவு.
உதிர்ந்த பூக்கள் ............... அதனுடன் தொடர்புடைய நினைவுகள் இன்னும் உதிரவில்லை.
எங்கள் இடிந்து விட்ட வீட்டின் முற்றத்தில் நின்று பூத்த பூ........இன்று அது இருக்குதா இல்லையா என தெரியவில்லை.
பவள மல்லிகை . வன்னியின் வற்றாப்பளை அம்மன் கோவிலில் இருக்கிறது. இதனை இப்போது எங்களை விட்டுப் போய்விட்ட எனது தம்பியுடன் போய் பார்த்த ஞாபகம்.உனக்கும் நினைவிருக்கும். மற்றது பிரிவு கவிதைக்கு வரிகள் நன்றாக உள்ளது .ஆனால் நிஜத்தில் சாத்தியப்படாதது . என்னவனைப் பிரிந்த அக் கணமே நானும் இறந்துவிடத்தான் நினைத்தேன் முடியவில்லை. ஆனாலும் தினமும் இறந்தபடியே வாழ்ந்த்துகொண்டிருக்கிறேன் .

கலகலப்ரியா said...

ok vasu.. ty! :)

ஹாலிவுட் பாலா said...

தல..! :)

அந்த பதிவின் நோக்கம், சுபாஷை கண்டுபிடிப்பது மட்டுமில்லை. அலெக்ஸா ரேட்டிங்கில் ஏன் இலங்கையின் பெயர் மறைகிறது என்பது தான் என் முதல் கேள்வி.

(அதற்கு காரணமாக நான் நினைத்தது/பது எந்த அளவிற்கு உண்மைன்னு தெரியலை. நான் நினைத்ததை இன்னும் வெளிப்படையாவும் சொல்லலை.

இலங்கையின் பிரச்சனைகளை, செய்திகளாக மட்டுமே தெரிந்து கொள்வதால்.. அதன் உண்மை நிலையை அலெக்ஸா ரேட்டிங்கை வைத்து தெரிந்து கொள்ள முடியுமா என்ற சோதனை.

நான் என்ன நினைக்கிறேன்னு உங்களுக்கு புரியுதா?)

ஆனா.. நான் அந்தப் பதிவில் செய்த தவறு.. ‘அலெக்ஸா’ ரேட்டிங் என்றால் என்னவென எக்ஸ்ப்ளெய்ன் செய்யாமல்.. எல்லோருக்கும் அந்த வார்த்தை பரிச்சியமாக இருக்கும் என நினைத்து எழுதியதுதான்.

இதுவரையிலும்.. அந்த முதல் பாகத்திற்கு விடை தெரியலை. :( :(
===

Balavasakan said...

ஹாலிவுட் பாலா said...
தல..! :)

நான் என்ன நினைக்கிறேன்னு உங்களுக்கு புரியுதா?)

ஓரளவு புரியுது பாலா....

Balavasakan said...

பூ-பவள மல்லிகை
இடம்-வற்றாப்பளை அம்மன் கோவில்


@archchana said...

உதிர்ந்த பூக்கள் ............... அதனுடன் தொடர்புடைய நினைவுகள் இன்னும் உதிரவில்லை. //

உணமை தான் அக்கா நான் இந்த பூவை முதன்முதல் பாரத்ததே வற்றாப்பளை அம்மன் கோவிலில் தான் இதுமட்டுமல்ல அவனுடன் இருந்த அத்தனை கணங்களும் உதிராமல் இன்னும் உயிருடனேயே இருக்கின்றன....

புலவன் புலிகேசி said...

//நம்ம புலவர் பலிகேசி…
அனபர் நான் சும்மா கிறுக்கி தள்ளிய கவிதைகளுக்கு தன்னுடய டரியலில் இடம் ஒன்று கொடுத்து என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். //

கிறுக்குனதே இப்படின்னா...??? எழுதுனா எப்புடி இருக்கும்...கலக்குங்க தல..பிரிவு கூட நல்லாதான் இருக்கு.

புலவன் புலிகேசி said...

//Blogger கலகலப்ரியா said...

beautiful! ty.. bala? surya? or vasu? ..

புலிகேசிக்கு எனது நன்றிகளும் பல..! //

//பலன் எனக்கு பல புதிய நணபர்கள் கிடைத்தாரகள். முக்கியமாக கலகலப்பிரியா இவரது பதிவுகள் என்னை ரொம்பவும் பாதித்தது.//

நன்றியெல்லாம் வேணாம் ப்ரியா..

பாலவாசகன் - ப்ரியாவின் எழுத்துக்கள் எனக்கும் மிக பிடிக்கும்.

யாழ் வானம்பாடி said...

nice work... keep it up...!

ShareThis

Related Posts with Thumbnails