ஒரு படைப்பாளி மறைந்து போகலாம் ஆனால் அவன் விட்டுச்சென்ற படைப்புக்கள் எந்நாளும் அழிவதில்லை அவன் மாண்டு போன பின்னும் காலம்காலமாக அவன் பெயரையும் புகழையும் பரப்பிய வண்ணம் இருக்கும். அப்படியாக முப்பது வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரால் எழுதப்பட்டு இப்போது என் கையில் சிக்கியுள்ள கவிதைகள் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
புதுக்கவிதை…. எழுத்துலகை இப்போது ஆக்கிரமித்து இருப்பது இந்த சொற்கள்தான். எவரும் இப்போது செய்யுள் வடிவ மரப்புக்கவிதைகள் எழுதுவது கிடையாது .. அப்படி என்றால் புதுக்கவிதைகள் தோன்ற முன்பு அல்லது அவை பிரபலமாகாத ஒரு காலத்தில் கவிதைகள் எப்படி இருந்திருக்கும் என்பதற்கு இவை நல்ல உதாரணங்கள்.
இந்த கவிதை தொகுப்பை தான் பிறக்கும் முனபே இறந்து போன தன்னுடைய தாத்தா எழுதிய கவிதைகள் என்று, யாழ்ப்பாணம் சித்தங்கேணியைச்சேர்ந்த என் நண்பன் ( வட்டுக்கோட்டை செந்தூரன் அல்லது வட்டு என்று சுருக்கமாக அழைக்கபடுபவன்) ஒருவன் கொடுத்தான். ( நன்றி செந்தூரன் ) இவை அவருடைய நினைவுமலரில் வெளியிடப்பட்டவை ஏனைய இவரது கவிதைகளை புத்தகமாக வெளியிடபோவதாக இந்த நினைவுமலரில் குறிப்பட்டிருக்கிறார்கள் பின்னர் புத்தகம் வெளிவந்ததா இல்லையா ஏனைய கவிதைகளுக்கு என்ன நடந்தது என்று அவனுக்கே தெரியாதாம்.
படங்களை கிளிக்கி பார்க்க பஞ்சியாய் உள்ளவர்களுக்காக ஒரு சில வரிகள்.. இங்கே தருகிறேன் மிகுதியை படிக்க விரும்பியோர் மேலே சொடுக்கி பெரிதாக்கி பாருங்கள்…
இத்தொகுப்பில் அவர் லண்டனிலே இருந்தபோது பெற்ற அனுபவமாக இனி வரேன் லண்டனுக்கு , இனிச்செல்லேன் இலங்கைக்கு போன்ற கவிதைகளும் கவிஞ்ஞர் விவசாயம் செய்த அனுபவத்தை எழுதிய யாழ்ப்பாணத்தில் வான் கருணை, என்ற கவிதையும் அவர் இறக்கும் தறுவாயில் வைத்திய சாலையிலிருந்து எழுதிய மூளாய் ஆசுபத்திரியில் யான், என்ற கவிதையும் அடங்கலாக நான்கு கவிதைகள் இருக்கிறது படித்து ரசியுங்கள்.
இனிவரேன் லண்டனுக்கு..
இரவு பகலாக லண்டனிலே இவ்வருடம்
பரவலாய் பெய்கின்ற பனியேயுன் கொடுமையினால்
மரமும் நடுங்கையிலே மக்கள்தான் என் செய்வார்
வரமுன் அறிந்திருந்தால் வந்திரேன் லண்டனுக்கு
வெள்ளைக்கம்பளம்போல் வீதியெலாம் இருப்பதனால்
துள்ளி விளையாடுகிறார் துரிதமுளோர் ஆயிடினும்
தள்ளாடி நான் நடக்க தயங்குகிறேன் உன் மீது
எள்ளவும் இரக்கமிலாய் இனிவரேன் லண்டனுக்கு
இனிச்செல்லேன் இலங்கைக்கு..
பனிக்காலம் நீங்கிற்று பகலவன் ஆட்சியிலே
நனி சிறந்த நாள் மலர்கள் நற்காய் கனியாகி
இனிய மணம் பரப்பி எல்லோர்க்கும் விருந்தளிக்க
என்னே என்னினபம் இனிச்செல்லேன் இலங்கைக்கு
பங்குனிபோல் இலங்கையிலே பகலவனும் லண்டனிலே
எங்கும் ஒளி பரப்பி இரவையே பகலாக்க
பொங்கும் உவகை கொண்டேன் பொறுமையே
டிங்கிருப்ப தன்றியான் இனிச்செல்லேன் இலங்கைக்கு.
இந்த நடையை பாரத்து தான் நானும் ஒரு கவிதை ஒன்று முயற்சி செய்தேன் அதுதான் தாய்க்கு ஒரு துரோகம்… என நான் எழுதியது.. எல்லலோருக்கும் எனது நத்தார் வாழ்த்துக்கள்….
.