எங்கள் நாடுகளில் புதிதாக ஒரு கூட்டணி என்றால் எப்பொழுதும் எதிபார்ப்பு களை கிளறி விட்டு இருக்கும் ...இதுவும் அப்படிதான் ஆரோக்கியமான கூட்டணி எத்தனையோ முறை நான் கனவு கண்ட கூட்டணி யும் கூட .
கெளதம் மேனன்- AR.ரஹ்மான்-அன்டனி -சிம்பு
எல்லாம் மிகப்பெரிய பெயர்கள் சிம்புவை தவிர சிம்பு அவரது பல படங்களில் வம்புகள்; தான் செய்திருக்கிறார் . ஆனால் இந்த முறை ஒழுங்கான பையனாக நடிப்பார் என்று தெரிகிறது ஏனெனில் அவர் சிக்கியிருப்பது கெளதம் எனும் சிங்கத்திடம் அல்லவா .
கெளதம் மேனனுக்கு இது ஆறாவது படம் ஐந்து படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன .பச்சை கிளி முத்து சரம் பெயர் பெற்ற அளவுக்கு வசூல் இல்லை" டமால்" ஆகிவிட்டது . ஆனால் அத்தனை படங்களும் ஹரிஸ் இன் இசையில் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவை, அப்பிடி இருந்ததும் ஹரிஸ் உடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இந்த படத்திற்கு இசைப்புயல் உடன் கூட்டு சேர்ந்து இருக்கிறார் கெளதம் மேனன் .
இது தான் கெளதம் மேனனின் படங்களிற்கு இருக்கும் வழமையான எதிர்பார்ப்புகளை இன்னும் அதிகரித்து இருக்கிறது .ஆனால் சிறிது காலத்திற்கு முன்பு ஜோதிகா வும் சூர்யா வும் இணைந்து ஏற்பாடு செய்த விருந்தில் ஹரிஸ் ஜெயராஜ் கெளதம் மேனன் பங்கு பற்றி மனம் திறந்து கதைத்திருந்ததாக செய்திகள் வெளியாகி இருந்ததன.
ஆக இந்த புதிய கெளதம் ரஹ்மான் கூட்டணி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது ஐயத்திற்கு உரிய விடயம் .ஆக விண்ணை தாண்டி வருவாயா இந்த அதிசய கூட்டணியில் வரும் ஒரே ஒரு படமாக இருக்க வாய்ப்புளதால் பெரிதும் முக்கியத்துவம் பெறுகிறது
வழமையாக ரஹ்மானின் இசை பந்தியில் நல்ல இயக்குனர்களுக்கு எப்போதும் நல்ல இசை விருந்து கிடைப்பதுண்டு கெளதம் மேனனும் இதற்கு விதிவிலக்கல்ல.ஆகவே ரஹ்மானின் ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய கொண்டாட்டம்.ஏனெனில் மணிரத்தினம் சங்கருக்கு பிறகு ரஹ்மானுக்கு தமிழில் கிடைத்த ஒரு நல்ல இயக்குனர் கெளதம் தான்.
அன்டனி பற்றி சொல்ல வேண்டும் என்றால் படத்தொகுப்பாளர்களின் பெயர்கள் பிரபலமானது இவர் வருகைக்கு பிறகுதான் முக்கியமாக் "பீமா" படத்தில் "முதல் மழை என்னை நனைத்ததே" பாடலுக்கு ஹரிஸ் இன் தாளத்திற்கு ஏற்ப இவரது படத்தொகுப்பு அந்த பாடல் பார்க்கும் போதெல்லாம் இவரை ஞாபகத்திற்கு கொண்டு வந்திருக்கிறது .
இப்படியாக பல காரணங்களால் தமிழ் சினிமா உலகில் எல்லாராலும் எதிர்பார்க்க படும் படமாகிவிட்டது இந்த படம் ,
இப்போதே எனக்கு பிடித்த படமாகிவிட்ட இந்த பிரமாண்ட கூட்டணியின் "விண்ணை தாண்டி வருவாயா" விண்ணை தாண்டுமா .....?தாண்டும் என்றே தோன்றுகிறது .