Tuesday, October 20, 2009

சபிக்கப்பட்ட தமிழர்கள்


௦8/10/2009 நேரம் பத்து மணி நாற்பது நிமிடம் நான்கு விநாடிகள் இந்த கணமே வேண்டுமானாலும் உலகம் அழிந்து போகட்டும் .....................


எங்கேயோ வேலையில்லாமல் சுற்றித்திரியும்  
வால்நட்சத்திரங்களே எரிகட்களே வாருங்கள்  
இந்த பூமியை இப்போதே இரையாக்குங்கள்
இது ஒரு படைப்பின் தவறு ............!
பிரமன் ஒருவேளை வெள்ளோட்டம் பார்கிறானோ..?
அவன் முதல் படைப்பு முற்றிலும் தோற்றுவிட்டது .
ஆம் ! அவன் ஒன்றை மறந்த்துவிட்டான்.
சமத்துவம் !
புல்...........!என்று ....புழு என்று தாவரம் விலங்கு என்று
ஏன் இத்தனை வில்லங்கம் ?
ஐந்தறிவு .....ஆறறிவு........ ஐரோப்பகாரன் ...........அமெரிக்கன் ...........
அவன் மட்டும் ஏன் உயர்ந்து போனான் ?
எல்லோரும் இந்த பூமியில் தானே தோன்றினோம்
அவன் நினைத்தால் தாலாட்டவும் வெறுத்தால் உதைக்கவும் ............
யூதர்கள் அவனுக்கு தேவைப்பட்டார்கள் ..... நாடு கிட்டைத்தது
தமிழர்கள் நாங்கள் அழிக்கப்பட்டோம்.
அவர்களுக்கும் எங்களுக்கும் என்ன வித்தியாசம்...
இருக்கிறது ................!
ரோசம் மானம் மூளை எல்லாம் 
அதிகமாகவே........... அவர்களுக்கு இருக்கிறது .

நாங்கள் முட்டாள்களாகவே இருந்தோம்  
இல்லை படைக்கபட்டோம்!
என் வீடு என் சுற்றம் என் காணி என் வேலி
இத்தனை சுயநலம் எந்த இனத்துக்கும் இருக்காது


எங்கள் ஊரில் மட்டும் ஏன் 
ஆனால் எத்தனை வசிட்டர்கள் எத்தனை விசுவாமித்திரர்கள்
ஊரெங்கும் சாமியார்கள் விட்ட வெடிபுளுகில்தான்  
அரைவாசி வெங்காயமாகி போனது எம் சமூகம்.

எப்போதும் நாங்கள் முட்டாள்களாகவே இருந்திருக்கிறோம்  
இல்லை படைக்கபட்டிருக்கிறோம்  
அது தான் சொல்ல்கிறேன் இது எம் தவறல்ல படைப்பின் தவறு
ஆகவே .....................! 
வால்நட்சத்திரங்களேஎரிகட்களே வாருங்கள்
இந்த பூமியை இப்போதே இரையாக்குங்கள் ............!
பிரமன் புத்தம் புது பூமி படைக்கட்டும்  
எப்போது சமத்துவம் நில்லைனாட்டபடுகிறதோ  
அந்த பூமி அழிவில்லாமல் இருக்கட்டும் .
புல் என்றால் எங்கும் புல் புழு என்றால் எல்லாம் புழு  
எல்லாம் ஓரறிவு எங்கும் ஓர் உயிர் ...........அப்படி ஒரு பூமி ..................
சிந்தித்து பாருங்கள்
ஏன் வேறு எந்த கிரகத்திலும் உயிர் இல்லை  
இது ஆண்டவனின் ஒரு பரீடசாரத்தமுயத்சி
படைப்பின் தவறு.......!
புயல் வெள்ளம் சுனாமி பூகம்பம் இருக்கிறது இறுதி ஆய்தம் global warming
எப்படியும் விரைவில் முடித்து விடுவான் .....
அது வரை நாம்........ ?
எங்கள் பரம்பரை அலகுகளில் எதோ ஒன்று குறைந்து போய்
நாம் பாடசாலை பல்கலைக்கழகம் தொடக்கி 
பார்லிமென்ட் வரை நக்கி பிழைப்போம் ..
சுயநலத்திற்கு உதாரணமாகிவிட்ட 
எங்கள் இனத்தை போன்று ஒரு இனத்தை 
அந்த புது பூமியல் இறைவன் படைக்காமலிருக்கட்டும்.

1 comment:

Shaharan said...

புதுக்கவிஞருக்கு எனது வாழ்த்துக்கள். Keep it up vaasu!!

உறுமி-ஒரு சந்தோஷ் சிவன் திரைப்படம்

ஒரு தேசம் அன்னிய ஆக்கிரமிப்புக்குட்படும் போது அதன் உண்மையான சரித்திரம் ஆக்கிரமிப்பாளர்களல் திரிவுபடுத்தப்பட்டே வரலாறு என்ற பெயரில் அதன் சந...