Wednesday, November 25, 2009

கண்டறியாத காதல்

ஒரு விண்ணப்பம்..ஒன்றுமே தெரியாது
என்று
எவ்வாறு சொல்லுவாய்பெண்ணே
ஒவ்வொரு நாளும்
என்னை இம்சைப்படுத்திவிட்டு
ஏய் சித்திரமே ..
என் சிந்தனையில்
உனை வரைந்து.
பத்திரமாய் என் நெஞ்சிற்குள்
பதுக்கி வைத்திருக்கிறேன்.
சத்தியம் செய் பெண்ணே
என் நித்திரையிலாவது
நீ வருவாயென
ஒரு கனவில்..

நான் நிலா..

அத்தனை கோள்கள்
எத்தனை நட்சத்திரங்கள்
அருகில் இருந்தும்
உன்னை தினம் சுற்றுகிறேன்
ஒரு நிலவாய்
நீயோ
எனை விடுத்து
சூரியனைச்சுற்றுகிறாய்


ஒரு முள்ளின் கதை
ஒரு
அழகிய ரோஜா
அருகில் எத்தனை முள்
கடவுள் போட்ட சாபம் அது
முன் ஜென்மத்தில்
காதல் செய்தவர் எல்லாம்
முள்ளாக அருகில்
காவல் செய்யட்டும் என்று
நானும் ஒரு முள்ளாக
உன் அருகில்
காமத்தென்றல்
அடிக்கடி
என் காவலைக் கலைக்க...
உன்னோடு கொஞ்சம்
உரசிப்பார்க்கிறேன்..
ம்........
பக்கத்தில் இருந்து என்ன பயன்
பறிக்கப்போவது இன்னொருவன்தானே

முடியாத ஒன்று....
கல் தடுக்கி
கால் இடறுவது போல
என் நினைவுகளுக்குள்
நீ இடறுகிறாய்
இதயத்திறகுள் நீ
எங்கு இருக்கிறாய்
தெரியவில்லை
தூக்கி எறிவதற்கு முயல்கிறேன்
முடியவில்லைகடவுளே நீதான் காப்பாத்தணும் எல்லாரும் காதல் கவிதை எழுதுறாங்க...அதுக்கு...எனக்கு இது தேவையா....


மன்னிக்கவும்...
பிடித்ததோ........ பிடிக்கவில்லையோ..
முழுவதும் படித்தீரகளோ..படிக்கவில்லையோ ....
நல்ல படங்கள் போட்டிருக்கிறேன் ...
பார்த்துவிட்டு ...அப்படியே ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள்.
இல்லையெனில் ....
கனவில் வந்து கவிதை படிப்பேன்...
ஜாக்கிரதை..!


Friday, November 20, 2009

சாபக்கேடு.


அண்மையில் யாழ்ப்பாணத்தில் பெற்றோல் தட்டுப்பாடு வரிசையில் நின்று எனது உந்துருளிக்கு பெற்றோல் நிரப்பினேன் அப்போது தான் ஒன்று தோன்றியது. யாழ் மக்களின் வாழ்வியலில் பல ஆற்றமுடியாத நோய்கள் வேரூன்றி போயிருக்கிறது.வாழ்கை முழுவதும் ஓடி ஓடியே நிம்மதி தேடிய மக்களின் மன உளைச்சலின் விளைவாக கூட இது இருக்கலாம்.


எங்களுக்கு எதுவும் இலகுவாக கிடைத்திருக்க வில்லை. இருக்க இடம் குடிக்க தண்ணீர் தொடங்கி பயண அனுமதி (டோக்கன் கிளியரன்ஸ்) வரை நின்று நின்று நொந்த கதைகளை எங்கள் கால்கள் சொல்லும்.


குழாய்கிணற்றில் தண்ணீருக்கு, லொறியில் வரும் பாணுக்கு, சங்ககடையில் அரிசி,மா,சீனி,பருப்புக்கு,பலசரக்குகடையில் பால்மாவுக்கு மண்எண்ணெயக்கு, விதானையிடம் கூப்பன் காட்டுக்கு, பயண அனுமதிக்கு பின்னர் பேருந்துக்கு கப்பலுக்கு அந்தந்த இடங்களில் தேனீர்விடுதிக்கு என ........ நீண்டு செல்கிறது இந்த பட்டியல்.....

நாங்கள் வரிசையில் நிற்காமல் எதை பெற்றிருக்கிறோம்........
எங்கள் விதி அப்படி.. ஆனால் எங்கள் செயற்பாடுகள் தான் மிகக்கொடுமை.


ஒரு வரிசையில் ஒழுங்காக நின்று வந்த வேலையை விரைவாக முடித்து செல்லும் எண்ணம் எவருக்கும் வருவதில்லை. நீ முந்தி நான் முந்தி என்று யார் முந்துவது என்பது தான் பிரச்சனை, ஒரு வரிசையில் ஆரம்பித்தது இரண்டாகி மூன்றாகி தேவையற்ற ஒரு நெரிசல் உருவாக்கப்பட்டிருக்கும்.


நல்ல உதாரணம் வவுனியா பிரயாணம் தான்....
கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக யாழ்ப்பாணத்தில் நடைமுறையிலிருந்த பாதுகாப்பு அனுமதி (கிளியரன்ஸ்) தளர்த்தப்பட்டிருப்பது நிம்மதியை தந்தாலும் இன்று வரை இந்த நான்கு ஆண்டுகளில் இந்த யாழ் - பிறமாவட்டங்களுக்கான பயணம் விழுங்கியுள்ள நேரம்....

யாழ்-திருகோணமலை கப்பல் பயணத்தைப்பற்றி சொல்ல விரும்பவில்லை அந்த கொடுமையை அனுபவித்து தான் பாரத்திருக்க வேண்டும் தவறவிட்டவர்களுக்கு இனி சந்தர்ப்பம் இல்லை.


கிளியரன்ஸ் பெறுவதற்கு - இரண்டு கிழமை
இதைதவிர  காலையில் ரயில்வே நிலையத்தில் 1 மணித்தியாலம்
பின்னர் சிங்கள மகா வித்தியாலயத்தில் மூன்று மணித்தியாலம்
பயணம் மூன்று மணித்தியாலம்
இவ்வளவும்143 km நீளமான ஒரு சிறிய தூரத்தை கடப்பதற்கு சாமானியன் படவேண்டிய துன்பங்கள். A9 பயணமென்பது ஒரு சாகசம்.


வவுனியா செல்வதற்கு நிற்கும் இடத்தில் பெரிய வரிசை ஒன்று இருக்கும் எல்லோரும் முதலில் பதிந்து விட்டுதான் வருவார்கள் ஒருவரையும் திருப்பி அனுப்பவது கிடையாது. ஆனாலும் எங்கள் சனம் அடிபடும் எங்கு செல்வதற்கு 300 மீற்றர் தூரத்திலுள்ள இன்னொரு இடத்திற்கு செலவதறகு அங்கு சோதனைக்காக இறக்கி விடுவார்கள்.பிறகு இன்னொரு வரிசை....


போகும் வழியில் பன்னிரண்டு பேருந்துகளும் ஒரு இடத்தில் தேனீருக்கு ஒரே நேரத்தில்  நிறுத்தப்பட அந்த கடையில் ஒரு குருக்ஷேத்திரமே நடக்கும். எத்தனை பேர் பட்டினி கிடந்து வருகிறார்கள்..? ஒரு இரண்டு மணித்தியாலத்தில் அப்படி என்ன பசி...?
நணபன் ஒருவன சொன்னான் 'சனம் கேவலமாக நெரிபடுதுகள்' என்று. பதினெட்டு மணித்தியாலம் கப்பல்ல காயஞ்சு போன சனத்துக்கு நான்கு மணி நேரம் வயித்த நிரப்பாமல் இருக்கமுடியாமல் போவது ஏன்...?
இல்லை அடிபட்டு இடிபட்டு வாங்கி தினபதில் தான் ஒரு திருபதியோ தெரியவில்லை...!


ஐந்து பேருந்துகளையும் ஒரு கடையில் நிறுத்தியவனை குறை சொலவதா வரிசையில் நின்றே வாங்கி பழகாத எம் மக்களை குறை சொல்வதா...?
இதை விட பெரியவரலாறு ஆரம்ப காலத்தில் கப்பலில் சென்றவர்களிடம் கேட்டால் தெரியும்....!


யார் போட்ட சாபம் எப்போது திருந்த போகிறோம்...!


"தனக்கு தனக்கு என்றால் படக்கு படக்கு என அடிக்கும்" சுளகு போல தன்னுடைய காரியம் என்றால் எத்தனை ஆவேசம் எத்தனை பலம் எம்மக்களுக்கு. இத்தனை பலமும் இத்தனை வேகமும் ஒரு நோக்கத்திற்காக ஒரே திசையில் செலுத்தப்பட்டால் எங்களால் அடைய முடியாதது எதுவும் இல்லை.ஆனால் நாங்கள் தான் சுயநலத்திற்கு உதாரணமான சபிக்கப்பட்ட தமிழர்கள்   ...! அல்லவா எப்படி முடியும்..?


 நானும் இரண்டு நணபர்களும் கந்தசாமி படம்பார்க்க ஒரு திரையரங்கிறகு சென்றோம். அந்த திரையரங்கில் அண்ணளவாக நாநூறு இருக்கைகள் இருக்கும். வந்த கூட்டமோ (யாழ்ப்பாணத்தின் வளர்ந்து வரும் தலைமுறை ) ஒரு நூறுதான், "போட்ட அட்டகாசம்"..... வெறுத்து போனது...!
ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துவிட்டு இறுதியாக போய் நான் மூணு இருக்கைகளில் உட்காந்து படம் பாரத்தேன். இருந்தது ஒரு ஒன்று இரண்டு கால்களுக்கும் ஒவ்வொன்று.Sunday, November 15, 2009

"பட்ட மரத்தின் கதை " யூத் புல் விகடனில்....என் முதல் படைப்பு

hsudhhnfபொழுது போகாமல் சும்மா ஜிமெயில் இன்பொக்ஸை திறந்து பார்த்த எனக்கு 
இன்ப அதிர்ச்சி நான் அனுப்பி வைத்த "பட்ட மரத்தின் கதை" கவிதை,
யூத் புல் விகடனில் வெளியிடப்பட்டதாக மெயில் வந்திருந்தது..
நீங்களும் பார்க்க மேலே உள்ள இணைப்பை சொடுக்குங்கள்
உனைப்போன்ற மரங்கள் அருகில்...
செழித்து வளர்ந்து நிற்கையிலே,
நீ மட்டும் ஏன் செத்து போனாய்....!
காய்ந்து போன பின்பும் உன் கம்பீரம் குறையவில்லையே.?
மரங்களுக்கு அழிவு ஒன்றில், மனிதனால்..!
இல்லையெனில் இயற்கையினால்.!
மனிதன் உன்னை வெட்டவில்லை.........
புயல் உன்னை சாய்க்கவில்லை........
இருந்தும் நீ மரித்து போனாய்.!
என்ன நடந்தது..?
ஒன்றும் குறைவில்லையே......
பூமி தாய் உனக்கு நீர் உணவு தருகிறாள்.
சூரிய பகவான் சக்தி தருகிறார்.
பக்கத்து மரம் ஒன்று நன்றாக தானே,
தின்று வளர்ந்திருக்கிறது.
ஓ...........ஓ ........!
உனக்குள்ளும் துரோகமா ......!
தமிழனோடு வளர்ந்ததில் ......
உங்களுக்கும் அந்த பழக்கமா....................!
என்று தொடக்கம் .............?
உன் ஆணி வேர் என்ன அகத்துறிஞ்ச மறுத்ததோ ?
அகந்தை கொண்டஉன் அழகிய இலைகள் தான், 
உனக்கு ஆக்கி போட மறுத்ததோ ?
சீ ....சீ ....
ஒருபோதும் அப்படி இருக்காது...
பிறகு என்னதான் நடந்தது.?
சிந்தித்தவாறு உன்னை கடந்து சென்றேன் ...

 
பக்கத்து மரம் சொல்லியது.......... 
நீ தற்கொலை செய்து கொண்டாயாம்.
நடு வீதியில் நட்டு வைத்தால் நல்ல நிழல்...
தருவேன் என்று நினைத்தாயா மானிடா...!
எம் இனத்தை கொலை செய்து,
தன் இனத்துக்கே கொள்ளி வைக்கும்,
பாழாய் போன மாந்தருக்கு,
நிழல் கொடுக்கவும் வேண்டுமோ.?
கொஞ்சம் ............வெய்யிலில்
காய்ந்த பிறகாவது விளங்கட்டும்,
பூமித்தாய்க்கு காய்ச்சல்........
என்று இறுதியில்.........
சொல்லி விட்டு செத்து போனாயாம்...!
மரம் என்றாலும் ........
மானம் கொண்டவன் நீ.....
(இந்த மரம் நிஜமாகவே யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ளது 

அதைக் கண்டு வந்தவை தான் இந்த வரிகள்
இந்த படங்கள் வரும் வழியில் சக நண்பிகள் கிண்டலடிக்க நடு வீதியில் நின்று எடுத்தேன் 
பலன் கிடைத்து விட்டது) 

நான் சொல்ல மறந்திட்டன் நீங்க ஓட்டு போட மறக்காதீங்க......


if [cnn
;q

Tuesday, November 10, 2009

வின்டோஸ் 7 வெற்றி பாதையில்.....
கூகிளின் வளர்ச்சியால் தலையை சொறிந்து கொண்டிருந்த மைக்கிரோசொப்ருக்கு கொஞ்சம் ஆறுதலான விடயம் அண்மையில் அதனால் மிக பிரமாண்டமாக வெளியிடப்பட்ட Windows 7 விற்பனை கொடிகட்டி பறப்பதுதான்.

பெருமளவான Vista மற்றும் Windows XP பாவனையாளர்கள் Windows 7 க்கு மாறிவருவது குறிப்பிடத்தக்கது. ஐப்பசி 22 ல் Windows 7 வெளியிடப்பட்ட பிறகு அதன் விற்பனை, 2007 தை மாதத்தில் Windows Vista வெளியிடப்பட்டபோது அதன் விற்பனையிலும் பார்க்க 234% உயர்வாக இருப்பதாக தரவுகள் கூறுகின்றன.


Net Application எனும் நிறுவனம் அண்மையில் கணிணி இயங்கு தளங்களின் பாவனை தொடர்பாக, இணைய உலாவிகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளை கொண்டு மேற்கொண்ட ஆய்வொன்றில், NetApplication நிறுவனத்தால் ஆய்வு நடத்தப்பட்ட அனைத்து கணினி களிலும் கார்த்திகை 1 ம் திகதி 3.6% ஆனவை Windows 7  இயங்குதளத்தை கொண்டிருந்த்து. இது Windows 7 உத்தியோகமாக வெளியிடப்பட்ட ஐப்பசி 22 ல் 1.99% ஆகவும் அதற்கு முன்னைய தினம் 21 ல் 1.89% ஆகவும் இருந்த்தாக கூறப்படுகிறது.

2009 ஐப்பசி மாதம் எல்லா வகையான இயங்கு தளங்களை கொண்டிருந்த கணினிகள் 92.52%. சோகம் என்னவென்றால் இது 2008 மார்கழி மாதம் 94% ஆக இருந்தது தான்.
Mac OS X -5.27 %
Linux at -0.96 %


அமேசன் இணையதளத்தில் Windows 7 க்கு செய்யப்பட்ட முற்பதிவுகளின் எண்ணிக்கை, 2007ல் வெளிவந்த ஹரிப்பொட்டர் புத்தகங்களின் இறுதிப்பாகமான Harry Potter and the Deathly Hallows, புத்தகத்திற்கு செய்யப்பட்ட முற்பதிவுகளின் எண்ணிக்கை யிலும் பார்க்க அதிகம் என அமேசன் இணையதளம் தெரிவித்திருக்கிறது என்றால் பாருங்களேன்.


பிரித்தானியாவின் பிரபலமான guardian.co.uk  இணையத்தளம் தனது தளத்துக்கு வருகை தருபவர்களில் Windows 7 பாவனையாளர்களின் எண்ணிக்கை Linux  பாவனையாளர்களை மிஞ்சியிருப்பதாக அறிவித்திருக்கிறது. கடந்த காலங்களில் Windows 7 பாவனை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வந்ததுடன் ஜூன் மாதம் இது முதன்முறையாக Iphone  பாவனையாளர்களை  முந்தியிருந்ததாக guardian இணையத்தளம் மேலும் தெரிவித்திருக்கிறது.


Windows 7 ன் இந்த  வெற்றிக்கு காரணம் இது Windows Vista உடன் ஒப்பிடும் போது நல்ல வேகம் குறிப்பிடத்தக்க பாதுகாப்பு கொண்டிருப்பதுடன் குறைந்த விலையில் கிடைப்பது மற்றும் சாதாரண தர கணினி, களிலும் நிறுவகூடியதாக இருப்பதுதான்.


கூகிள் மற்றும் அப்பிள் கம்பனிகளுடன் கடும் போட்டியில் இருக்கும் மைக்கிரோசொப்ருக்கு Windows 7 கொஞ்சமாவது ஆறுதலை கொடுத்திருக்கும்.

1983 ல் பில்கேட்ஸ்

அப்பாடா...! என்று கொஞ்சம் ஆறுதலான பில்கேட்ஸ் இப்போது ரூம் போட்டு யோசித்து கொண்டிருப்பார் எப்படி கூகிளை கவிழ்க்கலாம் என்று.......

Friday, November 6, 2009

மழையில் நனைந்து பார்..........


கொட்டு மழையில் ஒரு முறை
நனைந்து பார்.....!
உன்னில் விழுந்து உடைந்து சிதறும் மழை.
உயிர்வரை ஈரம் கசியும்.
உனக்குள் ஒரு நெருப்பு எரியும்.....
உன்னை சூடாக்க.
ஒரு முறை குடை பிடித்தவன்
தெய்வமாவான்.
ஒரு குடைக்குள் நீ ஒடுங்கி போவாய்சின்ன அரளி மரம் கண்டாலோ
ஆலமரம் என்பாய்
ஒரு கொட்டகையின் அருமை புரிவாய்

உன்னையே நீ கேட்பாய்
சுட்டெரிக்கும் வெயிலா
கொட்டும் அடை மழையா
எது கொடுமை.....?
மழையில் நனைந்து பார்

எப்போதாவது.
சட்டை போட்ட படி ஒரு குளியல்
நீ அணிந்திருக்க சட்டைக்கு ஒரு சலவை
போட்டிருக்கிறாயா
மழையில் நனைந்து பார்

நான்கு சுவற்றுக்குள் சும்மா ஏன் நனைகிறாய்.?
வெட்ட வெளியில்.
ஒரு ஆனந்த குளியல்
கொட்டி தீர்க்கிறது மழை...!
வா வந்து மோதி விளையாடு.


இவை இயற்கையின் அன்புச்சரங்கள்
இயற்கையின் சங்கமம் மழை
ஒரு முறை
கலந்து கரைந்து போ
அடுத்த முறை நீயும் மழையாவாய்

நல்ல மழை உனக்கு மட்டும் தான்
சிலவேளை
உன் சந்ததிக்கு அமில மழை தான்
உன்
"பேரப்பிள்ளையோ" "பூட்டப்பிள்ளையோ"
கண்ணாடி ஜன்னலூடு
மழையை வெறித்தபடி
கேட்கும் "தாத்தா......."
நீ மழையில் நனைந்து இருக்கிறாயா........?
அதற்காகவேனும்,
கொட்டு மழையில் ஒரு முறை நனைந்து பார்...!

உருவான கதை - மழைக்காலம் கல்லூரிக்கு புறப்படும் போது மழைக்கவசத்தை எடுத்துக்கொண்டு வாசல் வரை சென்ற நான் அண்ணாந்து பார்த்தேன் தெளிவான வானம் அங்கங்கே திட்டு  திட்டாக மேகங்கள் குந்தியிருந்து கூட்டம் நடத்தி கொண்டு இருந்ததன. நீல வானத்தையும் ரெயின்கோர்ட்டையும் திரும்ப திரும்ப பார்த்த நான் இறுதியில் ரெயின்கோர்ட்டை தூக்கி  போட்டுவிட்டு பேசாமல் வண்டியில் ஏறி சென்றுவிட்டேன்.
என் தவறு பின்னர் தான் தெரிந்தது. எங்கிருந்து வந்தனவோ அத்தனை மேகங்கள் வரும் நேரம் பொழிந்து தள்ளின போனால் போகட்டும் என்று வண்டியில் ஏறி மழையில் தொப்பலாக நனைந்து வரும் போதுதான் தோன்றியது, "பாசாகிப்பார்" "பெயிலாகிப்பார்" "பதிவெளுதிப்பார்" (சுபாங்கனின் கவிதை வாசிக்கும் போது பட்சி சொல்லியது வாசு நீயும் ஒன்னு எழுதணும் ,,,,ன்னு அப்ப ஐடியா ஒன்னும் வரல  ) என்று வைரமுத்துவை உல்டா பண்ணி நம்ம பதிவர்கள் பலர் எழுதியிருக்கிறார்கள் ...... நாம மழையில் நனைந்து பார் என்று எழுதலாமே .... வீடு வந்து சேர்வதற்குள் மூன்று வரி ரெடியாக மிச்சம் மூன்று நாட்களில் முடிந்தது.

டிஸ்கி-1 -"சட்டை போட்ட படி ஒரு குளியல்.... அணிந்திருக்க சட்டைக்கு ஒரு சலவை" முன்னாடியே சொல்லிபுட்ரேன் நீ சவர்க்காரம் போடாமலா உடுப்பு சலவை செய்கிறாய்  ன்னு யாராவது பின்னூட்டம் போட்ட்ராதீங்க ஆமா ........


Sunday, November 1, 2009

கண்ணீரின் கதை ......
ஒரு முறை சுரந்த கண்ணீரின் ஈரம்,
காயும் முன்பே மறுமுறை கலங்குகின்றன.....
 என் கண்கள்.

பூமிக்கு அடியில் யாரும் என்னை,
 புதைத்து வைத்து விடவில்லையே....
இமயமலையின் பாரம் என்  நெஞ்சில்.

எங்கள் வீட்டின்,
அத்தனை இரைச்சல்களையும் தாண்டி கேட்கும்...
என்  இதயத்துடிப்பு .

கார்த்திகை மாத கடும் குளிரையும்  சூடாக்கும்,
என் பெருமூச்சுகள் .

ம் .... ம் .....

ஒரு முறை திறந்து பார்க்கிறேன்.....!
அடுக்கடுக்காய் நெஞ்சத்தில் ஞாபகப்பெட்டகங்கள்,
ஒன்றில் கூட இல்லை சந்தோச கவிதைகள்.

எல்லாமே சோக சரங்களால் கோர்க்கப்பட்ட ,
எருக்கலம்பூ மாலைகள்.

நான் அழுது பல நாட்கள்........
அது தான் இப்படி ஒரு வேதனையோ.!

இத்தனை வரிகளுக்கும் சொந்தகாரன்......

"கவிதையாய் வாழ்ந்து காணாமல் போன
என்  நண்பன் ......!"என் நண்பன் என் உலகமாக இருந்தான்.
என் நண்பன்எனக்கு முழுதுமாக இருந்தான்.
என் நண்பன்என் இதயத்தின் மையமாக இருந்தான்.

அவன் இருக்கும் பொது சேர்த்த இனிய நினைவுகளை,
அவன் மறைவு மழுங்கடித்து விட்டது .

எஞ்சியிருப்பது ......என் இதயத்தில் ....
அவன்  இருந்த இடம் மட்டும் தான் .
அவன் ஆனந்தமாக என் நெஞ்சில்,
நடந்து சென்ற காலடிச்சுவடுகள் .....
காயங்களாகிவிட்டது இப்பொழுது .
அடிக்கடி நானே அதை தாக்கி பார்க்கிறேன்
என் நினைவுகளால் .

நண்பா...!
உன்னை இழந்த இந்த வேதனைக்கு ...
வயது மூன்று வருடங்கள்........
ஒரு வேளை நீ இருந்து நான் இறந்திருந்தால் ..
உனக்கு புரிந்திருக்கும் ...

"இந்த கண்ணீரின் கதை ..."

உறுமி-ஒரு சந்தோஷ் சிவன் திரைப்படம்

ஒரு தேசம் அன்னிய ஆக்கிரமிப்புக்குட்படும் போது அதன் உண்மையான சரித்திரம் ஆக்கிரமிப்பாளர்களல் திரிவுபடுத்தப்பட்டே வரலாறு என்ற பெயரில் அதன் சந...