Sunday, November 1, 2009

கண்ணீரின் கதை ......
ஒரு முறை சுரந்த கண்ணீரின் ஈரம்,
காயும் முன்பே மறுமுறை கலங்குகின்றன.....
 என் கண்கள்.

பூமிக்கு அடியில் யாரும் என்னை,
 புதைத்து வைத்து விடவில்லையே....
இமயமலையின் பாரம் என்  நெஞ்சில்.

எங்கள் வீட்டின்,
அத்தனை இரைச்சல்களையும் தாண்டி கேட்கும்...
என்  இதயத்துடிப்பு .

கார்த்திகை மாத கடும் குளிரையும்  சூடாக்கும்,
என் பெருமூச்சுகள் .

ம் .... ம் .....

ஒரு முறை திறந்து பார்க்கிறேன்.....!
அடுக்கடுக்காய் நெஞ்சத்தில் ஞாபகப்பெட்டகங்கள்,
ஒன்றில் கூட இல்லை சந்தோச கவிதைகள்.

எல்லாமே சோக சரங்களால் கோர்க்கப்பட்ட ,
எருக்கலம்பூ மாலைகள்.

நான் அழுது பல நாட்கள்........
அது தான் இப்படி ஒரு வேதனையோ.!

இத்தனை வரிகளுக்கும் சொந்தகாரன்......

"கவிதையாய் வாழ்ந்து காணாமல் போன
என்  நண்பன் ......!"என் நண்பன் என் உலகமாக இருந்தான்.
என் நண்பன்எனக்கு முழுதுமாக இருந்தான்.
என் நண்பன்என் இதயத்தின் மையமாக இருந்தான்.

அவன் இருக்கும் பொது சேர்த்த இனிய நினைவுகளை,
அவன் மறைவு மழுங்கடித்து விட்டது .

எஞ்சியிருப்பது ......என் இதயத்தில் ....
அவன்  இருந்த இடம் மட்டும் தான் .
அவன் ஆனந்தமாக என் நெஞ்சில்,
நடந்து சென்ற காலடிச்சுவடுகள் .....
காயங்களாகிவிட்டது இப்பொழுது .
அடிக்கடி நானே அதை தாக்கி பார்க்கிறேன்
என் நினைவுகளால் .

நண்பா...!
உன்னை இழந்த இந்த வேதனைக்கு ...
வயது மூன்று வருடங்கள்........
ஒரு வேளை நீ இருந்து நான் இறந்திருந்தால் ..
உனக்கு புரிந்திருக்கும் ...

"இந்த கண்ணீரின் கதை ..."

8 comments:

Subankan said...

நண்பனின் பிரிவின் வலி தெரிகிறது. வாழ்த்துக்கள்

archchana said...

மனதின் வலிகளை வரிகளிட்குள் கொண்டுவர முயற்சித்தும் முடியவில்லை .அவை கட்டுப்படாமல் வெடித்துவிடலாம் ஆனாலும் ........................ஏன் சாவிற்கு பயமா,உங்கட தம்பி மட்டும் என்ன special எல்லோரிற்கும் தானே உயிர் . நான் கூட ஆலங்குளத்தில் எப்ப விழுவேன் என்று தான் இருக்கிறேன் என்று சொன்ன நவா... .. அத்துடன் வீர வசனம் பேசிய
பலர் தங்கள் உயிர் மட்டும் தப்பினால் போதும் என்று வந்துள்ளபோது எமது இழப்பை தாங்கவே முடியவில்லை. இதை முதலே செய்திருக்கலாம்.

archchana said...

எங்கள் வீட்டின் மெழுகுவர்த்தி

balavasakan said...

அர்ச்சனா அக்கா ..உண்மைதான் .......
உங்களுக்கு பதில் எழுத என்னிடம் வார்த்தைகள் இல்லை
படித்துகொண்டிருந்தேன் வழமை போல் அவன் ஞாபகம் வர
வந்தது தான் இந்த வரிகள் ..
அவ்வளவு தான்

Unknown said...

//எல்லாமே சோக சரங்களால் கோர்க்கப்பட்ட ,

எருக்கலம்பூ மாலைகள். //

வலிகள்....??
ம்...
என்ன செய்வது...

balavasakan said...

@ கோபி
பெயரை சுருக்கி விட்டேன்
உங்கள் வருகைக்கு நன்றி ...

புலவன் புலிகேசி said...

நண்பரே இதே போல் நண்பனை இழந்த வலி எனக்கும் உண்டு...அதை நினைவுபடுத்திவிட்டது இந்தக் கவிதை........

ஊடகன் said...

ரொம்ப நல்ல இருந்தது..........
வாழ்த்துக்கள்.........
அனுபவமிக்க எழுத்து.............

உறுமி-ஒரு சந்தோஷ் சிவன் திரைப்படம்

ஒரு தேசம் அன்னிய ஆக்கிரமிப்புக்குட்படும் போது அதன் உண்மையான சரித்திரம் ஆக்கிரமிப்பாளர்களல் திரிவுபடுத்தப்பட்டே வரலாறு என்ற பெயரில் அதன் சந...