ஒரு விண்ணப்பம்..
ஒன்றுமே தெரியாது
என்று
எவ்வாறு சொல்லுவாய்பெண்ணே
ஒவ்வொரு நாளும்
என்னை இம்சைப்படுத்திவிட்டு
ஏய் சித்திரமே ..
என் சிந்தனையில்
உனை வரைந்து.
பத்திரமாய் என் நெஞ்சிற்குள்
பதுக்கி வைத்திருக்கிறேன்.
சத்தியம் செய் பெண்ணே
என் நித்திரையிலாவது
நீ வருவாயென
ஒரு கனவில்..
நான் நிலா..
அத்தனை கோள்கள்
எத்தனை நட்சத்திரங்கள்
அருகில் இருந்தும்
உன்னை தினம் சுற்றுகிறேன்
ஒரு நிலவாய்
நீயோ
எனை விடுத்து
சூரியனைச்சுற்றுகிறாய்
ஒரு முள்ளின் கதை
ஒரு
அழகிய ரோஜா
அருகில் எத்தனை முள்
கடவுள் போட்ட சாபம் அது
முன் ஜென்மத்தில்
காதல் செய்தவர் எல்லாம்
முள்ளாக அருகில்
காவல் செய்யட்டும் என்று
நானும் ஒரு முள்ளாக
உன் அருகில்
காமத்தென்றல்
அடிக்கடி
என் காவலைக் கலைக்க...
உன்னோடு கொஞ்சம்
உரசிப்பார்க்கிறேன்..
ம்........
பக்கத்தில் இருந்து என்ன பயன்
பறிக்கப்போவது இன்னொருவன்தானே
முடியாத ஒன்று....
கல் தடுக்கி
கால் இடறுவது போல
என் நினைவுகளுக்குள்
நீ இடறுகிறாய்
இதயத்திறகுள் நீ
எங்கு இருக்கிறாய்
தெரியவில்லை
தூக்கி எறிவதற்கு முயல்கிறேன்
முடியவில்லை
கடவுளே நீதான் காப்பாத்தணும் எல்லாரும் காதல் கவிதை எழுதுறாங்க...அதுக்கு...எனக்கு இது தேவையா....
மன்னிக்கவும்...
பிடித்ததோ........ பிடிக்கவில்லையோ..
முழுவதும் படித்தீரகளோ..படிக்கவில்லையோ ....
நல்ல படங்கள் போட்டிருக்கிறேன் ...
பார்த்துவிட்டு ...அப்படியே ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள்.
இல்லையெனில் ....
கனவில் வந்து கவிதை படிப்பேன்...
ஜாக்கிரதை..!
Subscribe to:
Post Comments (Atom)
உறுமி-ஒரு சந்தோஷ் சிவன் திரைப்படம்
ஒரு தேசம் அன்னிய ஆக்கிரமிப்புக்குட்படும் போது அதன் உண்மையான சரித்திரம் ஆக்கிரமிப்பாளர்களல் திரிவுபடுத்தப்பட்டே வரலாறு என்ற பெயரில் அதன் சந...


-
காலங்கள் கட கட என்று ஓடிக்கொண்டிருக்க வர..வர..நான் வாலிப பட்டத்தை இழந்து கொண்டிருக்கிறேன் என்பது தான் கவலைக்குரிய விடயம். புது வருடப்பிறப்பை...
-
ஒரு தேசம் அன்னிய ஆக்கிரமிப்புக்குட்படும் போது அதன் உண்மையான சரித்திரம் ஆக்கிரமிப்பாளர்களல் திரிவுபடுத்தப்பட்டே வரலாறு என்ற பெயரில் அதன் சந...
-
காலை 7 மணி தனது கடமையில் கண்ணும் கருத்துமாக நான்காவது தடவையாக அடித்த அலாரத்தை நிறுத்திவைத்து விட்டு அருகில் காதில்லாத பிறவி போல இன்னும் இழுத...

19 comments:
அட..... அசத்தல் கவிதைன்னே....
எப்பிடி உங்களால மட்டும்?
கலக்கிற்றீங்க போங்க.... :P
எல்லா கவிதைகளும் நல்லாருக்கு.... எப்படி இதெல்லாம்... நானும் கவிதை எழுதலலானு யோசிச்சா எல்லாம் மொக்கையாத்தான் வருது. உங்கள் நலன் கருதிதான் அதெல்லாம் வெளியிடாம வச்சுருக்கேன்.
அருமையாய் இருக்குதுங்கோ
கவிதைகள் பிரமாதம்
வாழ்த்துக்கள்
நன்றாக இருக்கிறது.............. ஆனாலும் ............இன்றைய நாள்களில் வேறு தலைப்பிலான பதிவினை எதிர்பார்த்தேன்.
நல்ல கவிதைகள் மற்றும் நல்ல படங்களும் கூட ....
@கனககோபி said...
கோபி யாரிடமும் சொல்லப்படாது அந்த கதையை...
@நாஞ்சில் பிரதாப் said...
//எல்லா கவிதைகளும் நல்லாருக்கு....//
சும்மா தானே சொலறீங்க....
@ ramesh-றமேஸ் said..
உங்கள் வருகைக்கும் கருத்துக்கம் நன்றிகள்
@archchana said..
அப்படித்தான் நானும் முதல் யோசித்தேன் என் நண்பர்கள் சிலர் வேண்டாம் என்றார்கள்...விட்டுவிட்டேன்
@kamalesh said...
நல்ல படங்களும் கூட ..
இது சரி...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
எல்லா கவிதைகளும் அருமை...
//நீயோ
எனை விடுத்து
சூரியனைச்சுற்றுகிறாய்//
அப்படி எதுனாச்சும் நடந்துச்சா...??
//காமத்தென்றல்
அடிக்கடி
என் காவலைக் கலைக்க...
உன்னோடு கொஞ்சம்
உரசிப்பார்க்கிறேன்..
ம்........
பக்கத்தில் இருந்து என்ன பயன்
பறிக்கப்போவது இன்னொருவன்தானே//
அழகு வரிகள்...
வாழ்த்துக்கள் தோழரே…..
கவிதைகள் நல்லாயிருக்கு.
தங்களின் தளத்தில் என்னவோ சிக்கல் இருக்கிறது என்று நினைக்கிறேன். நேரடியாக பதிவுக்கு செல்லாமல் செற்றிங் பக்கம் செல்கிறது இணைப்பு. பார்த்து திருத்தி விடுங்கள்.
@புலவன் புலிகேசி said...
//நீயோ
எனை விடுத்து
சூரியனைச்சுற்றுகிறாய்..அப்படி எதுனாச்சும் நடந்துச்சா...??
//
நண்பா என்னடா எல்லோரும் அமைதியா பின்னூட்டம் போட்டு போறாங்கன்னு பாரத்தேன்....நீங்க கப்புன்னு புடிச்சிட்டீக
எல்லாம் சும்மாதான் சார்...
@மருதமூரான். said...
நன்றி நண்பரே என்னவென்று பார்க்கிறேன்
அருமையான கவிதை நண்பா !!
படங்களின் தேர்வுகள் மிகப் பொருத்தம்.
வாழ்த்துக்கள்...
very very nice...lines as well as snaps...superb...
கவிதைகள் நன்றாக வந்துள்ளன. கடைசிக் கவிதையும் படமும் உச்சம்.
nice bro..! =).. யாழ்ப்பாணம் சுகமா..?
arumaiyana kavithaigal:). paaraattukkal.
'புலவர்' மூலமாகக் கிட்டிய புதுவரவு!
அனைத்தும் அருமை!
வாழ்த்துக்கள்!!
-கேயார்
தம்பி,
அத்தனையும் அருமை....
'ஒரு விண்ணப்ப'த்தோடு 'முள்ளின் கதை'யை சொன்னவிதம் விமர்சனத்தால் பாராட்ட 'முடியாத ஒன்று'.
'நான் நிலா அல்ல'... சூரியன்(பிரபாகர் நா சூரியன்னு சொல்ல வந்தேன்).
நிறைய எழுதுங்கள்...
பிரபாகர்.
அத்தனை நண்பர்களுக்கும் நன்றிகள்...
பிரபாகர் அண்ணா சூரியனுக்கு எத்தனை பெண்டாட்டிகள்......
ஹா..
ஹா...
ஹா...
ஹா...
அத்தனை கோள்கள்
எத்தனை நட்சத்திரங்கள்
அருகில் இருந்தும்
உன்னை தினம் சுற்றுகிறேன்
ஒரு நிலவாய்
நீயோ
எனை விடுத்து
சூரியனைச்சுற்றுகிறாய்///
அதுதான் வாடிக்கைதானே!!
///கல் தடுக்கி
கால் இடறுவது போல
என் நினைவுகளுக்குள்
நீ இடறுகிறாய்
இதயத்திறகுள் நீ
எங்கு இருக்கிறாய்
தெரியவில்லை
தூக்கி எறிவதற்கு முயல்கிறேன்
முடியவில்லை///
நல்லா இருக்கு.
Post a Comment