Friday, December 25, 2009

காலத்தை வென்ற கவி….

ஒரு படைப்பாளி மறைந்து போகலாம் ஆனால் அவன் விட்டுச்சென்ற படைப்புக்கள் எந்நாளும் அழிவதில்லை அவன் மாண்டு போன பின்னும் காலம்காலமாக அவன் பெயரையும் புகழையும் பரப்பிய வண்ணம் இருக்கும். அப்படியாக முப்பது வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரால் எழுதப்பட்டு இப்போது என் கையில் சிக்கியுள்ள கவிதைகள் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

 

புதுக்கவிதை…. எழுத்துலகை இப்போது ஆக்கிரமித்து இருப்பது இந்த சொற்கள்தான். எவரும் இப்போது செய்யுள் வடிவ மரப்புக்கவிதைகள் எழுதுவது கிடையாது .. அப்படி என்றால் புதுக்கவிதைகள் தோன்ற முன்பு அல்லது அவை பிரபலமாகாத ஒரு காலத்தில் கவிதைகள் எப்படி இருந்திருக்கும் என்பதற்கு இவை நல்ல உதாரணங்கள். 

 

 

இந்த கவிதை தொகுப்பை தான் பிறக்கும் முனபே இறந்து போன தன்னுடைய தாத்தா எழுதிய கவிதைகள் என்று, யாழ்ப்பாணம் சித்தங்கேணியைச்சேர்ந்த என் நண்பன் ( வட்டுக்கோட்டை செந்தூரன் அல்லது வட்டு என்று சுருக்கமாக அழைக்கபடுபவன்) ஒருவன் கொடுத்தான். ( நன்றி செந்தூரன் ) இவை அவருடைய நினைவுமலரில் வெளியிடப்பட்டவை ஏனைய இவரது கவிதைகளை புத்தகமாக வெளியிடபோவதாக இந்த நினைவுமலரில் குறிப்பட்டிருக்கிறார்கள் பின்னர் புத்தகம் வெளிவந்ததா இல்லையா ஏனைய கவிதைகளுக்கு என்ன நடந்தது என்று அவனுக்கே தெரியாதாம்.

 

படங்களை கிளிக்கி பார்க்க பஞ்சியாய் உள்ளவர்களுக்காக  ஒரு சில வரிகள்.. இங்கே தருகிறேன் மிகுதியை படிக்க விரும்பியோர் மேலே சொடுக்கி பெரிதாக்கி பாருங்கள்…

 

இத்தொகுப்பில் அவர் லண்டனிலே இருந்தபோது பெற்ற அனுபவமாக இனி வரேன் லண்டனுக்கு , இனிச்செல்லேன் இலங்கைக்கு போன்ற கவிதைகளும் கவிஞ்ஞர் விவசாயம் செய்த அனுபவத்தை எழுதிய யாழ்ப்பாணத்தில் வான் கருணை, என்ற கவிதையும் அவர் இறக்கும் தறுவாயில் வைத்திய சாலையிலிருந்து எழுதிய மூளாய் ஆசுபத்திரியில் யான், என்ற கவிதையும் அடங்கலாக நான்கு கவிதைகள் இருக்கிறது படித்து ரசியுங்கள்.

 

இனிவரேன் லண்டனுக்கு..

இரவு பகலாக லண்டனிலே இவ்வருடம்

பரவலாய் பெய்கின்ற பனியேயுன் கொடுமையினால்

மரமும் நடுங்கையிலே மக்கள்தான் என் செய்வார்

வரமுன் அறிந்திருந்தால் வந்திரேன் லண்டனுக்கு

 

வெள்ளைக்கம்பளம்போல் வீதியெலாம் இருப்பதனால்

துள்ளி விளையாடுகிறார் துரிதமுளோர் ஆயிடினும்

தள்ளாடி நான் நடக்க தயங்குகிறேன் உன் மீது

எள்ளவும் இரக்கமிலாய் இனிவரேன் லண்டனுக்கு

 

இனிச்செல்லேன் இலங்கைக்கு..

பனிக்காலம் நீங்கிற்று பகலவன் ஆட்சியிலே

நனி சிறந்த நாள் மலர்கள் நற்காய் கனியாகி

இனிய மணம் பரப்பி எல்லோர்க்கும் விருந்தளிக்க

என்னே என்னினபம் இனிச்செல்லேன் இலங்கைக்கு

 

பங்குனிபோல் இலங்கையிலே பகலவனும் லண்டனிலே

எங்கும் ஒளி பரப்பி இரவையே பகலாக்க

பொங்கும் உவகை கொண்டேன் பொறுமையே

டிங்கிருப்ப தன்றியான் இனிச்செல்லேன் இலங்கைக்கு.

 

இந்த நடையை பாரத்து தான் நானும் ஒரு கவிதை ஒன்று முயற்சி செய்தேன் அதுதான் தாய்க்கு ஒரு துரோகம்… என நான் எழுதியது..   எல்லலோருக்கும் எனது நத்தார் வாழ்த்துக்கள்….

 

 

.

Wednesday, December 16, 2009

தாய்க்கு ஒரு துரோகம்…

140203474_8cd8bf871b 
பல்லாயிரம் ஆண்டுகளாய் நன்றாகதான் இருந்தாய் 
ஏனிப்படி ஒரு தவறு செய்தாய் இயற்கைதாயே
ஆறாவது அறிவு படைத்தாய் உன் குழந்தைக்கு
அது படுத்தும் பாடு இப்போது நீ அறிவாய்.

கடைசி குழந்தையாய் மனிதன் நீ படைத்தாய்
சிறப்பாய் இருக்க பகுத்தறிவும் கொடுத்து வைத்தாய்
இன்று உனை அழிக்க உன் குழந்தை விளைய
பெற்றெடுத்த தாயே இப்போ நீ என் செய்வாய்.

மனிதன் காடழித்தான் கைதொழில் புரடசி என்றான்
கரியமில வாயு கொண்டு உன் காற்றுமண்டலம் நிரப்பினான்
தொழில்நுட்ப புரட்சி என்றான் விணவெளிக்கு சென்று வந்தான்
அந்த அறிவு கொண்டே அணுகுண்டும் படைத்து வைத்தான்.


அதிகமாக ஒரு ஆறறிவு நீ கொடுத்தாய்
முன்பிருந்த ஓர் அறிவை மனிதா நீ தொலைத்தாய்
காட்டுமிராண்டி என்று சொல்லி நீ பழிக்கிறாய்
நாட்டுமிராண்டி தனமாய் நீ வாழ்ந்து தொலைக்கிறாய்.


வயிற்று பசிக்கே விலங்குகள் உயிர் கொல்லும்
ஆசைப்பசி கொண்டு உன்னையே நீ கொல்லு
பிணந்தின்னும் விலங்குகள் எத்தனையோ மேல்  மனிதா
மனம் கொன்று தின்று வாழும் மடையா உன்னை விட.


உன் இருப்போ சமநிலையில் இயறகைத்தாயே
அவனிருப்போ உன் நிலையில் அறிவாய் நீயே
பகுத்தறிவு கொண்டு உனை அழிக்கும் மனிதனையே
நீ அழித்து உனை நிலை நிறுத்த முயல்கிறாயே.


இதை அறிந்தும் நாங்கள் இன்னும் திருந்த மாட்டோம்
தாயே உனைப்பற்றி நாங்கள் என்றும் வருந்த மாட்டோம்
செவ்வாயில் வீடு கட்ட திட்டமிடுகிறோம்
இங்கிருக்க எதுவுமின்றி தொலையப்போகிறோம்.

இந்த நடை ஒரு கவிதையிருந்து திருடினேன் நன்றாக இருக்கிறது உங்களுக்கு பிடித்திருந்தால் சந்தோசம் அந்த கவிதையை அடுத்த பதிவில் தருகிறேன்.
 ..

Tuesday, December 1, 2009

பாழாய்ப்போன பழம் ரோடு…

இந்த படத்தில் நீங்கள் பாரப்பது தான் -பழம் வீதி- பழம் ரோடு என்றால் இங்கு  அனைவருக்கும் தெரியும். யாழ்ப்பாணத்தில் நல்லூருக்கு அண்மையாக பலாலி வீதியையும் நல்லூருக்கு செல்லும் அரசடி வீதியையும் இணைக்கும் சிறிய வீதி. ஐந்து மாதங்களுக்கு முனபு என் நணபனின் புகைப்படக்கருவியை சோதிப்பதறகாக சும்மா வீதியில் நின்று எடுத்த படம் எங்கோ கணினியின் ஒரு மூலையில் கிடந்ததை தேடிப்பிடித்து போட்டிருக்கிறேன்.


DSCN0959_thumb2
இதுதான் என்னுடைய ராஜபாட்டை… நம்ம வாசஸ்தலம் இருக்குமிடம். சிறு வயதில் நான் ஓடி விளையாடிய… பட்டம் விட்டு பழகிய.. மைதானம். எனக்கு துவிச்சக்கர வண்டி ஓட்ட கற்று கொடுத்த  ஆசான்…இப்போது இந்த பழம் வீதியின் கதியை பாருங்கள்….


20112009353_thumb4
1991 ஆம் ஆண்டு இறுதியாக புனரமைக்கப்பட்ட பிறகு ஒரு மாதத்திறகு முன்பு வரை நன்றாகத்தான் இருந்தது ஒரு சிறிய கிடங்கு கூட இருக்கவில்லை.  இதற்கு பக்கமாக செல்லும் யாழ்ப்பாணத்தின் பிரதான வீதிகளில் ஒன்றான பலாலி வீதி மதகு ஒன்று கட்டுவதறகாக மூடப்பட்டு போக்குவரத்து முழுவதும்  பாவம் இந்த பழம் வீதியால் திருப்பி விடப்பட்ட பிறகு தான் பிரச்சனை.  மழையால் ஊறி ஏற்கனவே சொதசொதத்து போய் நல்ல பதமாக இருந்த என் ராஜபாட்டையை, அது இதுவரை கண்டிராத பல கனகரக வாகனங்கள் எல்லாம் சேர்ந்து உழுது தள்ளிவிட்டன……இந்தப்படம் எடுத்து ஒரு வாரம் ஆகிறது இப்போது வீதியின் நிலைமை ….மிகவும் மோசம்…..இதைப்போல மூன்று இடங்களில் பாழாய்ப்போயிருக்கிறது என் பழம் வீதி.


இதனால் வாகனத்தில் செல்வோருக்கு எந்தவித கஸ்டமும் இல்லை என்னைப்போல் உந்துருளியில் , துவிச்சக்கர வண்டியில் செலபவர்களுக்கெல்லாம் சேற்றை வாரி இறைத்துவிட்டு போவார்கள். அதுவும் பரவாயில்லை, நடந்து செலபவர்களின் நிலைமை…? பக்கத்திலிருக்கும் பல பாடசாலைகளுக்கு வெள்ளைச்சீருடையுடன் நடந்து செல்லும் துவிச்சக்கர வண்டியில் செல்லும் சின்னஞ்சிறுசுகளின் கதி…?


நான் கூட பரீடசை என்று அறிவித்த பிறகுதான் பாடப்புத்தகம் தூக்குவேன் அதே போல நம்ம ஊரில் பாருங்கோ மழை வந்த பிறகு தான் யாழ் மாநகர சபை வீதி எல்லாம் திருத்துவானுகள்…மழை வரும்மட்டும் காவலிருப்பானுகள் பலாலி வீதி மதகை நல்ல கோடை வெயில் கொளுத்தி எறியும்போதே திருத்தம் செய்து முடித்திருந்தால் நம்ம ராஜபாட்டை தப்பியிருக்கமோல்லியோ..


என்ன கொடுமை என்றால் இனி இதை எப்போது சீர் செய்வார்கள் எனபதுதான் பலாலி வீதி வேலை முடிந்து திறக்கப்பட்டால் பிறகு பழம் வீதி  அவர்களுக்கு தேவைப்படாது … அப்பிடி யாராவது புண்ணியவான் யாழ் மாநகர சபையிலிருந்து இதை திருத்த நினைத்தாலும் மழை இடம் கொடுக்காது மழை விட்டால் பிறகு நம்ம மா.சபை இதையெல்லாம் மறந்து போய்விடும்… அனேகமாக எனக்கென்னவோ இது 2010 மாரிகாலம் மழை தொடங்க தான் ஏதாவது நடக்கும்..


இதையெல்லாம் உங்களிடம் சொல்லி என்ன நடக்க போகிறது …எல்லாம் ஒரு ஆதங்கம் தான் இத்தனை காலமும் சர்..என்று நான் வண்டியில் ஓடித்திருந்த வீதி இப்படி ஆயிப்போச்சேன்னு தான் கவலை.. ம்..உறுமி-ஒரு சந்தோஷ் சிவன் திரைப்படம்

ஒரு தேசம் அன்னிய ஆக்கிரமிப்புக்குட்படும் போது அதன் உண்மையான சரித்திரம் ஆக்கிரமிப்பாளர்களல் திரிவுபடுத்தப்பட்டே வரலாறு என்ற பெயரில் அதன் சந...