காலங்கள் கட கட என்று ஓடிக்கொண்டிருக்க வர..வர..நான் வாலிப பட்டத்தை இழந்து கொண்டிருக்கிறேன் என்பது தான் கவலைக்குரிய விடயம். புது வருடப்பிறப்பை ஏன்தான் பட்டாசு கொளுத்தி விருந்து வைத்தெல்லாம் கொண்டாடுகிறார்களோ தெரியவில்லை. ஏனெனில் ஒவ்வொரு வருடம் முடியும்போதும் நாம் முதிர்ந்துகொண்டிருக்கிறோம் எனபதுதான் எனக்கு உள்ளத்தில் உறைக்கும் உண்மை. அப்போ..! வயது கூடுவதென்றால் மக்கர்களே உங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோசமோ,,?
எனது பிறந்த நாட்களிலெல்லாம் நான் ரொம்ப வருத்தப்படுவேன்…அட மக்கா உனக்கு ஒரு வயசு போச்சே புரியுதான்னு… ஆனாலும் என்ன செய்வது இப்படியே இளமையாய் இருப்பதென்றால் எனக்கு சந்தோசம் தான், ஆனால் என்னைப்போல் எல்லோரும் அப்படியே இளமையாய் இருப்பதென்றால் ஒரு பூமி பத்தாதுப்பா.
படைத்தவன் எல்லாவற்றையும் நன்றாக புரிந்துதான் இப்படி எழுபது எண்பதுகளில் நாங்கள் மண்டையை போடுகிறமாதிரி எங்கள் மண்டையில் புரோகிறாம் எழுதியிருக்கிறான். அவன் முற்றிலும் அறிந்தவன் நாங்கள் எங்கள் புத்தியை பாவித்து ஏதாவது தில்லு முல்லு பண்ணி நீண்ட காலம் வாழ்க்கை எனும் வண்டியை ஓட்டுவதற்கு இயலுமானவரை முயற்சி செய்வோம் என்று தெரிந்தவன். பாருங்கள் இயற்கையின் சவால்களுக்கு எதிராக விஞ்ஞானத்தை விருத்தி செய்து எங்கள் எங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொண்டது முதல் நோய்களுக்கு எதிராக நவீன மருத்துவத்தை கண்டுபிடித்தது வரை ஆண்டவனின் ஆட்குறைப்புக்கு எதிரான மனிதன் வாழ்க்கை போராட்டம் பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. இறப்பு வீதங்கள் எல்லாம் பாதாளத்துக்கு சரிந்து செல்ல மனிதன் இனப்பெருக்க வீதம் மட்டும் கிடு கிடு என உயர்ந்து செல்ல… [ இதை குறைக்கத்தான் எய்டஸ் என்ற ஒன்றை புகுத்தினானோ என்னமோ…]
இதனால்தான் படைக்கும் போதே எங்களை கொஞ்சம் கிறுக்கு பிடித்தவர்களாக படைத்து தொலைத்துவிட்டான்… விளைவு இனவெறி மதவெறி கொண்டு ஆளுகாள் அடிபட்டு ஓரளவுக்கு எங்கள் எண்ணிக்கையை நாங்களே குறைத்து கொள்கிறோம்.
ஆனால் ஆண்டவன் நினைத்தது ஒன்று நடந்தது இன்னொன்று. வாழும்போது எப்பவாவது சண்டை பிடித்து செத்து தொலையுங்கள் என்று ஆண்டவன் எழுதி வைக்க மனிதன் சண்டையையே வாழ்க்கையாக்கிவிட்டான்.அம்பு வில்லில் தொடங்கிய யுத்தம் அணுகுண்டு வந்த பிற்பாடுதான் கொஞ்சம் குறைந்து போயிருக்கிறது. இப்படியே போனால் அடிக்கடி சண்டை போட்டே பூமியை சுடுகாடு ஆக்கிவிடுவான் மனிதன் என்று ஆண்டவன் எண்ணினாரோ என்னமோ ஐன்ஷ்டீனாக அவதரித்து வந்து அணுகுண்டை கண்டுபிடித்து அதை ஆளுக்காள் ஒவ்வொருவர் கையில் அளித்துவிட்டு போயிருக்கார்.
மனிதா..! சாவதென்றால் ஒரேயடியாக சாம்பல் மேடு .! வாழ்வதென்றால் ஒழுங்காக வாழுங்கள்..!. இதுதான் அணுகுண்டை அளித்த கடவுளின் செய்தி…
பூமி வரையறை செய்யப்பட்டது இத்தனை உயிர்கள்தான் உலகில் வாழலாம் என்று.. நாங்கள் பெருக பெருக பல உயிரினங்கள் சிறுகி சிறுகி இங்கிருந்து காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன. உண்மையில் இது ஒருவித ஆக்கிரமிப்பு என்றுதான் சொல்ல வேண்டும். மனிதன் இயறகையை ஆக்கிரமித்து கொண்டிருக்கிறான். இப்படியே போனால் ஓரு காலத்தில் இயற்கை என்ற சொல்லுக்கு அர்த்தம் அகராதியில் மட்டும்தான் இருக்கும். இப்படி ஒரு அழகான ஒன்றை எந்த லோகத்திலும் இல்லாத ஒன்றை இரசித்து இரசித்து படைத்த ஆண்டவனுக்கு பொறுக்குமா. அதுதான் சுனாமி பூகம்பம் பன்றிக்காய்ச்சல் இனி பரதேசிக்காய்ச்சல் என்று கொத்து கொத்தாக எங்களை கொள்ளையடித்துக்கொண்டு இருக்கிறான்.
இதுதான் இன்றைய நிலைமை… ஆனால் என்ன இப்போது அடிபட்டு சாவது சாகடிக்கபட்டுக்கொண்டிருப்பது எங்களை போன்ற அல்லக்கைகள் தான். கடவுளும் கண்மூடி மௌனமாய் இருக்கிறார்.அவருக்கென்ன அமெரிக்காவில் செத்தாலென்ன அமிஞ்சிக்கரையில செத்தால் என்ன..? மனிதன் ஆட்குறைப்பு நடந்தால் சரிதானே..இத்துடன் எங்கள் பக்கம் நிறுத்திவிடுவாரோ… இல்லை இனியும் இந்த ஆள் குறைப்பு தொடருமோ…. ஆண்டவனுக்கு தான் அவனுக்குதான் வெளிச்சம்….என்ன நான் சொல்றது சரிதானே…
இறுதியாக .. இங்கு நான் சொல்ல வந்தது என்னவென்றால்.. இயற்கையின் கட்டுப்பாடுகளை மனிதன் மீறினாலும் ஏதோ ஒன்று அவனை இயற்கைக்கு இசைவாக கட்டுப்படுத்திய வண்ணமே இருக்கும்.
இது முடிந்து விடவில்லை இன்னும் தொடரும் இந்த ஆள்குறைப்பு …!
8 comments:
ஏன் தம்பி இந்த எண்ணங்கள் இந்த வயதில். கட்டிலை படுத்துக்கொண்டு விட்டத்தைப் பார்த்தபடி அடிக்கடி யோசிக்கவேண்டாம். இதையெல்ல்லாம் யோசித்தால் ஒன்று பைத்தியம் பிடிக்கும் இல்லையே ஞானம் பிறக்கும். எங்களுக்கு எல்லாம் ஞானம் பிறக்கிறளவுக்கு அறிவுத் தெளிவு இல்லை ஆகவே பைத்தியம் தான் பிடிக்கும்.
யாதும் ஊரே யாவரும் கேளீர் வாழ்க்கை வாழ்வதற்கே என எண்ணினால் எந்த கவலையும் இல்லை.
வந்தியத்தேவன் said...
##ஏன் தம்பி இந்த எண்ணங்கள் இந்த வயதில்##
காதல் கத்திரிக்காய் ஒண்ணும் இல்லாட்டி இப்படித்தான் எண்ணங்கள் வரும்..
##கட்டிலை படுத்துக்கொண்டு விட்டத்தைப் பார்த்தபடி அடிக்கடி யோசிக்கவேண்டாம். இதையெல்ல்லாம் யோசித்தால் ஒன்று பைத்தியம் பிடிக்கும் இல்லையே ஞானம் பிறக்கும். ##
பைத்தியம் புடிச்சாலும் பரவாயில்லை ஞானம் புடிக்ககூடாது பிடிச்சு ஒரு கள்ளச்சாமியானேனோ கோபியிட்ட தப்பமுடியாது
##யாதும் ஊரே யாவரும் கேளீர் வாழ்க்கை வாழ்வதற்கே என எண்ணினால் எந்த கவலையும் இல்லை##
அப்பிடித்தான் போகுது இடையிடையேஇப்பிடித்தான்...
நன்றியண்ணா...
ம்ம்... என்ன... அப்போ ஒரு ஆண்டில பண்ணினத இப்போ ஒரு நொடில பண்ணுறாங்க... காலத்துக்கு ஏத்த மாதிரி செம ஸ்பீட்... (நான் எப்பவோ பைத்தியம் ஆயாச்..)
இது தான் வாழ்க்கை.
வாழ்க்கை வாழ்வதற்கே...
""ஊர்வசி ஊர்வசி Take it easy ஊர்வசி""
காதலன் படப்பாடலைக் கேளுங்க..
(ஏ.ஆர்.ரஃமான் பிரியராச்சே)
அனுபவத்துக்கு வயசு கூடனும் என்று வயசுகள் சொல்லுறத கேட்டிருக்கோம்..
ம், இதெல்லாம் யோசிச்சு தலையிடி வந்ததுதான் மிச்சம் பாஸ்.
//யாதும் ஊரே யாவரும் கேளீர் வாழ்க்கை வாழ்வதற்கே என எண்ணினால் எந்த கவலையும் இல்லை.//
2nd it
life is unexpecting cinema...
we are guest roll actors god is hero...
கடவுளே என்ன கொடுமை இது? இந்த வருடத்துடன் எனது TEENAGE போகப்போகிறது.. அவ்வ்..
நல்லவேளை ஞாபப்படுத்தினீங்க அண்ணே..
லைட்டா தரையிடி வருகுது..;)
நல்லாத் தானே இருந்தீங்க?
ஓ! அண்டைக்கு மணற்கேணிக்கு போனீங்க என?
நாம்செய்யும் பிழைகளுக்கு இதுவரை நாம் கண்டிராத ஒரு நபரிடம் பழிபோடுவதை நான் ஏற்கவில்லை...
எல்லாமே ஒவ்வொரு காரணத்திற்கு என்ற உங்கள் கருப்பொருளை ஏற்றுக் கொள்கிறேன், அதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை...
ஆனால் சுனாமி வந்தது எங்கள் நடவடிக்கைகளால் தானே? நாம் தானே இயற்கைச் சமநிலையைக் குழப்பினோம்?
Post a Comment