Friday, January 29, 2010

கடமை தவறும் யாழ் ஊடகங்கள்….

ஒரு சமூகத்தை சரியான வழியில் செலுத்துவதற்கு அல்லது ஒரு முக்கியமான காலகட்டத்தில் முடிவுகளை எடுப்பதற்கு மக்களை வழிநடத்துவதில் ஊடகங்களின் பங்கு மிகவும் இன்றியமையாதது.

 uthayan

யாழ்ப்பாண ஊடகங்கள் அந்த வேலையை இன்றுவரை கண்ணும் கருத்துமாக செய்துவருகின்றன என்றுதான் சொல்லவேண்டும்.  அதறகு ஒன்று அல்ல எத்தனை  “சபாஷ்” வேண்டுமென்றாலும் போடலாம். எத்தனையோ ஆபத்துக்கள் மத்தியிலும், மருந்துக்கு கூட பத்திரிகை அச்சிட பேப்பர் கிடைக்காத காலத்திலும், பல உயிர்களை கொடுத்தும் கூட விலை போகாமல் சொல்ல வேண்டியதை சொல்ல தவறாத இந்த  ஊடகங்கள் உண்மையில் பாராட்டப்பட வேண்டியவை. அவற்றை விமர்சனம் செய்வது எனபது எனது நோக்கமல்ல என்றாலும், அரசியல் என்ற வட்டதிற்கு அப்பால் பல விடயங்களில் சமூகவிழிப்புணர்வை ஏற்படுத்தவும், வளர்ந்து வரும் நவீன உலகத்தின் போக்குகளை, படைப்புகளை,  உலகத்திலிருந்து முற்றுமுழுதாக தனிமைப்படுத்தி இருந்த யாழ்மக்களிற்கு காட்டவும் இந்த ஊடகங்கள் என்ன செய்திருக்கின்றன என்பது ஒரு தவிர்க்கமுடியாத கேள்வி.

 

இதுதான் ஆரம்பத்தில் படித்தவன் தொடங்கி பாமரன் வரை படுக்கையிலிருந்து எழும்பியவுடன் பச்சைத்தண்ணீர் கூட குட்டிக்காம பேப்பர் வேண்டி பாத்துக்கொண்டே தேத்தண்ணி குடித்த நிலை மாறி,இப்பொழுது வெறுமனே இந்த அழுக்கு அரசியலுக்கும் ஆங்காங்கே நடக்கும் விழாக்கள்,  வில்லங்கங்கள் செயதிகளுக்கும், அதிகமாக மரண அறிவித்தல் நினைவஞ்சலிகளுக்குந்தான் பேப்பர் … என்று கடமைக்கு பேப்பர் வேண்டும் நிலை  ஏற்பட்டிருக்கிறது.ஒரு பத்திரிகையை செத்தவீட்டுபேப்பர் என்று மக்கள் அழைக்கும் அளவுக்கு…... இருக்கிறது இன்றைய யாழ் ஊடகங்களின் நிலைமை..!!!

 

யுத்தம் நடந்த காலத்தை விட இப்போதுதான் யாழ்ப்பாண ஊடகங்களுக்கு பொறுப்புக்ககள் அதிகம்… காரணம் திறந்துவிடப்பட்டிருகும் பாதை.வெறும் நிலத்தில் போட்டு விறபனை செய்யப்படும் சோளன் தொடங்கி.. தெற்கிலே ஒடுக்கப்பட்டிருக்கும் போதைமருந்து,  விபச்சாரம், (இப்போதே சமுத்திரத்தில் தெரியும் பனிக்கட்டியாக ஒரு சில கதைகள்  வெளியில் வந்திருக்கிறது) இன்னும் எத்தனையோ சமூகப்பிரச்சனைகள்  அத்தனைக்கும் புதிய சந்தையாக யாழ்ப்பாணம், (வாகன நெரிசல் அதிகரித்து வரும் வீதிவிபத்துக்கள்… ) யாரும் ஆரம்பத்திலே கண்டு கொளவதில்லை எல்லாம் முற்றி முறிக்கமுடியாத அளவுக்கு பெருத்த பிறகுதான் குய்யோ முறையோ என்று கூக்குரலிடுவார்கள். இதை எல்லாம கண்டு கொள்ளாத அரசாங்க அதிகாரிகளின் முதுகில் தட்டி.. முகத்தில் அறைந்து… சொல்லவேண்டிய ஊடகங்கள் அமைதியாக இருப்பதுதான் பெரும் ஆச்சரியம்.

 

சரி..!!!அதுதான் போகட்டும்.!!! மரணஅறிவித்தல்.. விளம்பரங்கள்.. என்று உழைக்கிற பணத்தில் இன்னும் இரண்டு அதிகமாக பக்கங்களை போட்டு கொஞ்சம் உலக நடப்புகள் ஏதாவது நல்ல ஆய்வுக்கட்டுரைகள் (அரசியல் அல்ல) புத்தம புதிய கண்டுபிடிப்புகள்(உதாரணமாக அண்மையில் பிரபலமான sixth sense இதை நான் பிளாக்குகளில் பாரத்து எனது நண்பர்களுக்கு சொல்லித்தான் அவர்களுக்கே தெரியும்) எத்தனை விடயங்கள் புதிதாக இணையத்தில் கொட்டிக்கிடக்கிறது.அதை கொஞ்சமாவது பொறுக்கி போட்டால் இணையத்துடன் தொடர்பில்லாதவர்களுக்கு,(யாழ்ப்பணத்தில் பெரும்பாலான பெண்களுக்கு கணினி என்றால் ஒவ்வாமை)   பள்ளி செல்லும் பிஞ்சுகள் பலருக்கு  பயனுள்ளதாக இருக்காதா..??

 

யாழ்ப்பாண பத்திரிகைகளே…!! ஏன்..?..ஏன்..? ஏன் முடியவில்லை..?? உங்களால்..!!!

 

‘எப்படியோ விக்கிற பேப்பர் தானே ஏன் இந்த எடுபுடி வேலை எல்லாம்’ என்று நினைக்கிறார்களா..? இல்லை யுத்தம் என்ற குளிருக்குள் போர்த்தி படுத்திருந்தவர்கள் இன்னும் போர்வை விலக்கி வெளியில் வரவில்லையா..? முதல் சொன்னது தான் சரி போல தெரிகிறது எதுவும் வியாபாரந்தானே.!!! எதை எழுதினாலும் இத்தனை பேப்பர்தான் விற்பனை என்றால் ஏன் புதிதாக எழுதப்போகிறார்கள்.!!!

 

ஒரு உண்மையான ஊடகம் எது…..?? என்றால்

நான் சொல்வதைத்தான் மக்கள் படிக்கவேண்டும் என்றல்லாமல் மக்களுக்கு எது தேவையோ அதை சொல்லவேண்டும்..!!!

Tuesday, January 19, 2010

தொற்றக்கூடாத(து).. ரோகம்..

வெட்டி சாய்க்க.. இரும்பு மட்டும்,
பலகாலமாய்,
முட்டி முட்டி மொட்டையாய்ப்போக..!
பருத்து வளர்ந்து நிமிர்ந்து நின்ற,
பெரு விருட்சம் - தனில்,
கூடு கட்டி குருவிகள் பல..!
சில கிளைகளுக்கு..
பிடித்த(து) ரோகம் – பலன்
தரு முறித்து இரும்பிறுக்கி-தன்
இன சனம் வெறுத்து ஒழிக்க
மானமற்று துகிலுரித்து…
விசம் கொண்டு - தன்
மேனி மினுக்கி - வெட்டும்
இரும்புக்கு  கூர்தேய்த்து பிடியாகி - போய்
மரம் கொத்தி பிளந்து கூடு பல கலைத்து
வெட்டி விறகாக்கிய கட்டை- கொண்டது
தூ..துரோகம்
இனி வெட்ட மரமேது..?
நீயும் விறகுதான்…!.

Friday, January 15, 2010

ஒரு கங்கண சூரிய கிரகணம்.........

               

ஒவ்வொரு முறையும் சூரிய கிரகணம் என்று பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் எல்லாம் செய்தி செய்தியாக காட்டும்போது நான் நினைப்பதுண்டு எப்போதாவது எனக்கு இதை பார்க்க கிடைக்காதா என்று, அது இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்று நினைக்கவில்லை. அதுவும் இந்த நூற்றாண்டின் மிக நீண்ட கங்கண சூரிய கிரகணம், இதற்கு முன் கங்கண சூரிய கிரகணம் 1901ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் திகதி தான் எமது பிரதேசத்தில் பார்க்க கூடியதாக இருந்தது.  இதில் என்ன விசேசம் என்றால் இந்த முறைதான் சூரிய பகவானின் பார்வை எம்பக்கம் திரும்பியிருக்கிறது, முழு சூரிய கிரகணத்தையும் நாங்கள் பாரக்கும் வாய்ப்பு, கிரகணத்தின் பாதையின் மத்திய கோட்டில் யாழ்ப்பாணம், இந்தியாவில் தனுஸ்கோடி நம்ம சென்னை பதிவர்களுக்கு சந்தர்ப்பம் இல்லை.. யாராச்சும் போனீர்களா..?

இப்படி ஒரு சந்தர்ப்பம் இனி வாழ்நாளில் கிடைக்குமோ யாருக்கு தெரியும். . அதுதான் மதிய உணவுக்கு வீடு செல்லாமலே கல்லூரி மைதானத்தில் ஆதர்-சி-கிளாக் நிறுவனத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்வுக்கு சென்று முழுக்கிரகண்ணதையும் பாரத்து படம் எடுத்து ரசித்தேன்.

 

சூரியனையே சுட்டவன் நான் எனது N-73ஆல்

 

 

வீடு சென்றிருந்தால் ஆத்தா அறைக்குள் போட்டு கதவை இழுத்து சாத்தியிருக்கும் பச்சைத்தண்ணீர் கூட கிடைக்காது என்று நினைத்து தான் .. நீங்களும் அப்பிடித்தானே நினைக்கிறீர்கள்..! ஆனால் நடந்ததோ வேறு வீட்டில் எல்லோரும் இரண்டு மூன்று பழைய படச்சுருள்களை ஒன்றாக வைத்து சூரிய கிரகணம்  பாரத்திருக்கிறார்கள். நான் வீடு சென்று எனது வீரக்கதையை அவிழ்த்து விடலாம் என்றால் அமைதியாக வந்தது பதில் தங்கையிடம் இருந்து ‘இஞ்ச நாங்களும் பாத்தநாங்கள் நீ வெடிக்காதையடா …’ பேசாமல் வாயை மூடியபடி வெறுமையாய் கிடந்த வயிற்றை நிரப்ப அம்மா பசிக்குது என்றேன்.

 

இலைகள் போட்ட கோலங்கள்

 

இது ஒரு அபூர்வ காடசி…! கங்கண சூரிய கிரகணம் ஏற்படும்போது மாத்திரம் நீங்கள் இந்த காட்சியை மரங்களின் கீழே காணக்கூடியதாக இருக்கும். அடர்த்தியான மர இலைகளின் இடைவெளிகளால் ஏற்படுத்தப்படும் சின்னஞ்சிறு துளைகள் ஊசித்துளைக்கமரா(Pin hole effect) என்று ஆண்டு ஒன்பதில் படித்திருப்பீரகளே அது போன்று தொழிற்படுவதனால் கங்கண சூரிய கிரகணத்தின் நிழல் கீழே நிலத்தில் வளையம் வளையமாக தோன்றுகிறது.

 

படத்தொகுப்பு..

முழுச்சூரிய கிரகணத்தின் படத்தொகுப்பு இதோ பாரத்து ரசியுங்கள்…

 

 

 

படித்து கிழிக்க..

 

கங்கண சூரிய கிரகணமன்னா என்ன அது எப்பூடி வருது இப்பிடி எல்லாம் யாருக்காச்சும் டவுட் இருக்குன்னா “ஆளை விடுங்கடா சாமி”

நானே லிங்க் கொடுத்திடுறன் தோ.. வீக்கிபீடியா…இங்கு போய் சூரிய கிரகணத்தை பற்றி விலாவாரியாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Solar eclipse,

Solar eclipse of January 15, 2010

NASA ECLIPSE WEB SITE

Friday, January 8, 2010

நான் கண்ட அழகு…

ஐம்புன்களில் சிறந்தது எது என்று என்னை கேட்டால் விழியா..செவியா… எதை தெரிவு செய்வது என்று குழப்பம் எனக்கு … உங்களுக்கு…? யாராவது எனக்கெல்லம்  நாக்குத்தான் சிறந்தது நான் தின்னுறத்துக்கு தான் பிறந்தேன்னு சொன்னீங்க வந்து கண்ணை புடுங்கிடுவேன் அப்புறம் காதை அறுத்திடுவன்… புரிஞ்சுதா…! ஏன்னு ரொம்ப சிம்பிளா ஓரு காரணம் சொல்லவா நீங்க ஒரு அறுசுவை உணவு உதாரணத்திறகு ஒரு கொத்துரொட்டியோ அல்லது அது என்னாங்க பிட்சாவா.. ஏதாச்சும் சாப்பிடணும் இன்னா கட்டாயம் காசு குடுத்தே ஆகணும். இல்லாட்டி என்னமாதிரி யாராச்சும் நண்பனுக்கு ஆட்டைய போட்டே ஆகணும். ஆனால் ஒரு அழகான பொண்ணு ஒண்ணை சைட் அடிக்கணும இன்னா அதாவது அழகை ரசிக்கணும் இன்னா அந்த பொண்ணுக்கு சில்லறையா கொடுக்கப்போறிங்க இல்லைத்தானே.! அழகை ரசிப்பதற்கு யாரிடமும் அனுமதி பெறவேண்டியதில்லை..

 

போகும் இடமெல்லாம் பூமியில் பூவில்.. தொடங்கி பொண்ணு.. வரை அழகு கொட்டி கிடக்கு.அதை ரசிப்பதற்கு உங்களுக்கு இரண்டு கண்கள் இருக்கு..! பிறகென்ன புகுந்து விளையாடி விடவேண்டியது தான். நல்ல அழகா..! நாள்தோறும் பாத்து ரசிக்கணுமா இப்பத்தான் கையில் எப்பவும் ஒரு கமெராபோன் இருக்கே சுட்டுத்தள்ள வேண்டியது தான். ஆனால் இங்க தான் ஒரு சிக்கல் பூவை படம் எடுக்கலாம்..! பொண்ணை படம் எடுக்கலாமா..? பிறகு கன்னம் பூ ஆகிவிடாது..!

இத்தனை பெரிய விளக்கம் ஏன் தெரியுமா அண்மையில் நான் யாழ்பாணத்தை சுற்றி ஒரு வலம் வந்திருந்தேன் அங்கெல்லாம் நான் சுட்ட அழகுகளை உங்களுக்கு காட்ட வேண்டாமா.. அதுதான்.

 


 

பூக்களை மட்டும்தான் புடிக்க முடிந்தது ….

 

03012010581 03012010597 03012010599

 

இது வடமாராட்சி மணற்காட்டில் காணும் இடம் எல்லாம் மலர்ந்திருந்த பூக்கள் மணற்தரைக்கும் உப்புக்காற்றுக்கும் பழகிப்போனவை போல. ரோஜா மட்டும் இல்லைங்க இந்த பூக்களும் அழகோ..அழகுதான்..!

 


 

கடலும் நுரையும் ….

 

03012010262  03012010629 DSC01092 DSC01250

 

முதல் மூன்றும் மணறகாட்டு கடல், கடைசி கஜூனா பீச் எல்லாமே இந்து சமுத்திரம் தானுங்க..! கடலை பார்க்க பார்க்க கவிதை கவிதை யாய் வரலை.. என்ன ஒரு அழகு அலைகளும் அவை எழுப்பும் ஓசையும் காலை களுவும் நுரைகளும் … அப்பப்பா..

என்னைக்கேட்டால் கடலும் பொண்ணுங்களை போல் தான் எனபேன்.! ஏன்னா இரண்டும் அருகில் இருந்து பார்க்கும் மட்டும் அழகாய்த்தான் இருக்கும் உள்ளே இறங்கினால்…. அந்தளவுதான்.! வெளியில் அழகாக இருக்கும் இரண்டும் எத்தனை பேரை விழுங்கியிருக்கும் என்று யாருக்கும் தெரியாது.!

 


 

மணற்காடு சவுக்குதோப்பு…

 

03012010261 03012010571 03012010583

 

முதல் இரண்டு படங்களையும் சும்மா பாருங்கள் மணற்காட்டுக்கு செல்லும் வழியில் நிறைந்து கிடக்கும் சவுக்குதோப்புகள். ஆனால் மூன்றாவது கொஞ்சம் விசேசம் இது மணற்காட்டில் மணலால் மூடப்பட்ட தேவாலயமாம்.

 


 

நகுலேஸ்வரம்

 

03012010673

 

 

புராதன கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தின் முகப்பு.

 

 

 

 

 

 

 

 

 

 

 


 

ஒரு வரலாறு தூங்கும் இடம்.!

 

03012010273 

ம்…

இந்த ஒரு எழுத்துத்தான் என்னால் எழுத முடிந்தது !

அழகு மட்டும் இல்லைங்க உணர்வுகளும் கொட்டிக்கிடக்கு.!

 

 

 

 

 

 


 

சரி பாத்தாச்சா.. இப்ப சொல்லுங்க ஐம்புலன்களில் எது சிறந்தது விழி தானே…..?

இல்லை வாயா..!

யார்ரா அவன்..? எடுறா அரிவாள..!

 

.

Tuesday, January 5, 2010

பூவா.. தலையா.. வாழ்க்கை..

பூ..

 

srilanka_25c_r

 

உடலுக்குள் துள்ளிக்குதிக்கும் மனது

ஒவ்வொரு வினாடியும் புன்னகை சிந்தும் வாய்

யாரையாவது அன்பாய் முதுகில்

அறையத்துடிக்கும் கைகள்

காண்பதெங்கிலும் தாளம் போடும் விரல்கள்

காற்றில் நடனமாடும் கால்கள்

சிரிக்கும் விழிகள்

அத்தனை உயிரணுக்களும் அமுதம் உண்டதாய்

ஆனந்த …பூ

மலர்ந்தது முகத்தில்.

 

தலை.

 

1978_srilanka_pn1_o

 

கனக்கும் இதயம்

கைகளால் இழுத்து புடுங்கி எங்கோ

எறிய துடிக்கிறது மனது

அண்டம் முழுவதும் மண்டைக்குள் இறங்கியதாய்

வெளியில் பிதுங்கிவர துடிக்கிறது விழிகள்

காவல் செய்யவோ மறுக்கும் இமைகள்

நீண்டு நெடிந்து செல்லும் இரவுகளின்…

விடியலில் தொலைந்து போயிருக்கும் தூக்கம்

என்னவோ ஏதோ செய்யும் கைகள்

நிறக கூட மறுக்கும் கால்கள்

காயையும் தாங்கும் சிறு காம்பு போல் கழுத்தில்

கவிழ்ந்து போகும் தலை..

 

 srilanka6rupees1995

 

சிலசமயம் மலரும் சந்தோச

பூ முகத்தில்..

சிலசமயம் துக்கத்தில துவண்டு விழும்

தலை கழுத்தில்

இரண்டுக்கும் நடுவே

உருண்டோடும் நாணயமாய்

நம் வாழ்க்கை.

 

 

.

ஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….

காலங்கள் கட கட என்று ஓடிக்கொண்டிருக்க வர..வர..நான் வாலிப பட்டத்தை இழந்து கொண்டிருக்கிறேன் என்பது தான் கவலைக்குரிய விடயம். புது வருடப்பிறப்பை ஏன்தான் பட்டாசு  கொளுத்தி விருந்து வைத்தெல்லாம்  கொண்டாடுகிறார்களோ தெரியவில்லை.   ஏனெனில் ஒவ்வொரு வருடம் முடியும்போதும் நாம் முதிர்ந்துகொண்டிருக்கிறோம் எனபதுதான் எனக்கு உள்ளத்தில் உறைக்கும் உண்மை. அப்போ..! வயது கூடுவதென்றால் மக்கர்களே உங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோசமோ,,?

எனது பிறந்த நாட்களிலெல்லாம் நான் ரொம்ப வருத்தப்படுவேன்…அட மக்கா உனக்கு ஒரு வயசு போச்சே புரியுதான்னு… ஆனாலும் என்ன செய்வது  இப்படியே இளமையாய் இருப்பதென்றால் எனக்கு சந்தோசம் தான்,  ஆனால் என்னைப்போல் எல்லோரும் அப்படியே இளமையாய் இருப்பதென்றால் ஒரு பூமி பத்தாதுப்பா.

youthful_mind_is_spontaneous-resized-600

படைத்தவன் எல்லாவற்றையும் நன்றாக புரிந்துதான் இப்படி எழுபது எண்பதுகளில் நாங்கள் மண்டையை போடுகிறமாதிரி எங்கள் மண்டையில் புரோகிறாம் எழுதியிருக்கிறான்.  அவன் முற்றிலும் அறிந்தவன் நாங்கள் எங்கள் புத்தியை பாவித்து ஏதாவது தில்லு முல்லு பண்ணி   நீண்ட காலம் வாழ்க்கை எனும் வண்டியை ஓட்டுவதற்கு இயலுமானவரை முயற்சி செய்வோம் என்று தெரிந்தவன். பாருங்கள் இயற்கையின் சவால்களுக்கு எதிராக விஞ்ஞானத்தை விருத்தி செய்து எங்கள்  எங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொண்டது முதல்  நோய்களுக்கு எதிராக நவீன மருத்துவத்தை கண்டுபிடித்தது வரை ஆண்டவனின் ஆட்குறைப்புக்கு எதிரான மனிதன் வாழ்க்கை போராட்டம் பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது.  இறப்பு வீதங்கள் எல்லாம் பாதாளத்துக்கு சரிந்து செல்ல மனிதன் இனப்பெருக்க வீதம் மட்டும் கிடு கிடு என   உயர்ந்து செல்ல… [ இதை குறைக்கத்தான் எய்டஸ் என்ற ஒன்றை புகுத்தினானோ  என்னமோ…]

இதனால்தான் படைக்கும் போதே எங்களை கொஞ்சம் கிறுக்கு பிடித்தவர்களாக படைத்து தொலைத்துவிட்டான்… விளைவு இனவெறி மதவெறி கொண்டு ஆளுகாள் அடிபட்டு ஓரளவுக்கு எங்கள் எண்ணிக்கையை நாங்களே குறைத்து கொள்கிறோம்.

 

ஆனால் ஆண்டவன் நினைத்தது ஒன்று நடந்தது இன்னொன்று. வாழும்போது எப்பவாவது சண்டை பிடித்து செத்து தொலையுங்கள் என்று ஆண்டவன் எழுதி வைக்க மனிதன் சண்டையையே வாழ்க்கையாக்கிவிட்டான்.அம்பு வில்லில் தொடங்கிய யுத்தம் அணுகுண்டு வந்த பிற்பாடுதான் கொஞ்சம் குறைந்து போயிருக்கிறது. இப்படியே போனால் அடிக்கடி சண்டை போட்டே பூமியை சுடுகாடு ஆக்கிவிடுவான் மனிதன்  என்று ஆண்டவன் எண்ணினாரோ என்னமோ ஐன்ஷ்டீனாக அவதரித்து வந்து அணுகுண்டை கண்டுபிடித்து அதை ஆளுக்காள் ஒவ்வொருவர் கையில் அளித்துவிட்டு போயிருக்கார்.

atomic-bomb-fat-boy

 

 

மனிதா..! சாவதென்றால் ஒரேயடியாக சாம்பல் மேடு .! வாழ்வதென்றால் ஒழுங்காக வாழுங்கள்..!.  இதுதான் அணுகுண்டை அளித்த கடவுளின் செய்தி…

 

 

 

 

பூமி வரையறை செய்யப்பட்டது இத்தனை உயிர்கள்தான் உலகில் வாழலாம் என்று.. நாங்கள் பெருக பெருக பல உயிரினங்கள் சிறுகி சிறுகி இங்கிருந்து காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன. உண்மையில் இது ஒருவித ஆக்கிரமிப்பு என்றுதான் சொல்ல வேண்டும். மனிதன் இயறகையை ஆக்கிரமித்து கொண்டிருக்கிறான். இப்படியே போனால் ஓரு காலத்தில் இயற்கை என்ற சொல்லுக்கு அர்த்தம் அகராதியில் மட்டும்தான் இருக்கும். இப்படி ஒரு அழகான ஒன்றை எந்த லோகத்திலும் இல்லாத ஒன்றை இரசித்து இரசித்து படைத்த ஆண்டவனுக்கு பொறுக்குமா. அதுதான் சுனாமி பூகம்பம் பன்றிக்காய்ச்சல் இனி பரதேசிக்காய்ச்சல் என்று கொத்து கொத்தாக எங்களை கொள்ளையடித்துக்கொண்டு இருக்கிறான்.

Nature-Photos

இதுதான் இன்றைய நிலைமை… ஆனால் என்ன இப்போது  அடிபட்டு சாவது சாகடிக்கபட்டுக்கொண்டிருப்பது  எங்களை போன்ற அல்லக்கைகள் தான். கடவுளும் கண்மூடி மௌனமாய் இருக்கிறார்.அவருக்கென்ன அமெரிக்காவில் செத்தாலென்ன அமிஞ்சிக்கரையில செத்தால் என்ன..? மனிதன் ஆட்குறைப்பு நடந்தால் சரிதானே..இத்துடன் எங்கள் பக்கம்  நிறுத்திவிடுவாரோ… இல்லை இனியும் இந்த ஆள் குறைப்பு தொடருமோ…. ஆண்டவனுக்கு தான் அவனுக்குதான் வெளிச்சம்….என்ன நான் சொல்றது சரிதானே…

இறுதியாக .. இங்கு நான் சொல்ல வந்தது என்னவென்றால்.. இயற்கையின் கட்டுப்பாடுகளை மனிதன் மீறினாலும் ஏதோ ஒன்று அவனை இயற்கைக்கு இசைவாக கட்டுப்படுத்திய வண்ணமே இருக்கும்.

இது முடிந்து விடவில்லை இன்னும் தொடரும் இந்த ஆள்குறைப்பு …!

Friday, January 1, 2010

சிறகடித்து வானில் ஏணி போட்டு……

2010 ஆம் ஆண்டு மொட்டவிழ்ந்து எம் நெஞ்சமெல்லாம் சந்தோச வாசம் வீசிக்கொண்டிருக்கும் இந்நாளில் ஏதாவது கவலைகள் இருந்தால் ஒரு இரண்டு நாளைக்கு அனைத்தையும் தூக்கி போட்டு விட்டு புத்தாண்டை சந்தோசமாக புத்துணர்வுடன் வரவேற்போம் நண்பர்களே.

 

நான் நேற்று  2009 ம் ஆண்டை   மிகவும் ஜாலியாகவே கல்லூரியில் நடந்த விழா ஒன்றில் ஆடிப்பாடி வழியனுப்பி வைத்தேன். அந்த சந்தோசம் இன்னும் எந்நெஞ்சில் பச்சையாக அப்படியே ஒட்டி இருக்கிறது. அத்தனை இன்பத்தையும்  உங்களோடு பகிர்ந்து கொள்வோம் என்றால் அந்தளவுக்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை.…என்ன செய்வது என்று யோசித்த போதுதான் எனக்கு நான் ரொம்ப “சந்தோசமாக” “இன்பமாக” “ஜாலியாக” “குஜாலாக” இருக்கும் போதெல்லாம் என் வாய் அல்லது மனசு முணுமுணுக்கும் ஏ.ஆர் ரகுமானின் பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது.

 

கேட்கும்போதெல்லாம் மனதுக்கு ஒரு புதிய உத்வேகத்தை கொடுக்கும் இந்த பாடலுக்கு ஏ.ஆர்.ரகுமானின் அற்புதமான மெட்டுக்கு வரிகளை கோர்த்திருப்பவர் பழனிபாரதி. பாடுபவர் மனோ என்று  நினைக்கிறேன். இந்த பாடலை முதன் முதல் நான் கேட்டது…எனது பத்து வயதில்.. அன்று எனக்கு புலமைப்பரிசில் பரீடசைக்கு கணிதம் கற்பித்த ஆசிரியரின் (இப்போது அவர் உயிருடன் இல்லை.) வீட்டில் ஒரு குட்டி வானொலிப்பெட்டியில் இலங்கை சர்வதேச ஒலிபரப்பு கூட்டுதாபனத்தின் லீவியின் சினிமாப்பாடல்கள் என்ற நிகழ்ச்சியில்தான். இன்று வரை அந்த நினைவுகளை இந்த பாடல் பத்திரமாக என் மூளையில் பதுக்கி வைத்திருக்கிறது.

எப்போது  நான் இந்த பாடலை கேட்டாலும் பத்து வயதிறகு சென்று விடுகிறேன் அத்தனை புத்துணர்ச்சி நெஞ்சில் வரும்.

 

அந்த அற்புதமான பாடலை பகிர்ந்து கொள்வதன் மூலமாக கோலாகலமாக  2010 ஆம் ஆண்டின் முதல்பதிவை எனது வலைப்பூவில் இட்டு எனது இந்த பயணத்தை தொடர்கிறேன். நீங்களும் இந்த பாடலை கேட்டு ரசித்து புதிய வேகத்துடனும் புத்துணர்ச்சியுடனும் 2010 ஆம் ஆண்டை எதிர் கொள்ளுங்கள். உங்களுக்கு இந்த ஆண்டில் வரும் சவால்கள் எல்லாவற்றையும் துணிவுடனும் தன்நம்பிக்கையுடனும் நீங்கள் எதிர்கொண்டு தொடர்ந்து வெற்றி கொடி நாட்ட எனது வாழ்த்துக்கள்.

இதோ அந்த பாடல் வரிகள்..

 

வானில் ஏணி போட்டு,

ஹேய் கட்டு, கொடி கட்டு..!

சொர்க்கம் வந்ததென்று,

ஹேய் தட்டு, கை தட்டு..!

மின்னல் நமக்கு தங்க சங்கிலி,

விண்மீன் எல்லாம் சின்ன மின்மினி,

வானவில் தானே நம் வாலிப தேசக்கொடி.

 

சிறகடித்து வானில் ஏணி போட்டு…

 

சுட்டெரிக்கும் அந்த சூரியனை நாம் கட்டி போடவேண்டும்,

ஒரு சுடாத சூரியன் வேண்டும்.

வீச மறுக்கும் காற்றை  கொஞ்சம் தட்டிக்கேட்க வேண்டும்,

மண்ணில் வருகின்ற வானம் வேண்டும்.

சுற்றும் பூமியை நிறுத்து..!

புது சட்டம் போட்டதை நடத்து !

கை இணைத்து…

பகை முடித்து வா..வா…!

 

சிறகடித்து வானில் ஏணி போட்டு…

 

ராமர் என்னடா பாபர் என்னடா ஒரே கோயில்கட்டு,

மதம் எல்லாமே ஒன்றே என்று.

காவேரியை கங்கையாற்றிலே ஒன்று சேர்த்து விட்டு,

ஒரு வாய்க்காலை இங்கே வெட்டு.

ஒரு போகிப்பண்டிகை எதுக்கு..?

பழம் பஞ்சாங்கத்தை கொழுத்து..!

தலையெடுத்து….

அதை அழித்து வெல்வோம்..!

 

சிறகடித்து வானில் ஏணி போட்டு…

 

 

 

 

 

.

உறுமி-ஒரு சந்தோஷ் சிவன் திரைப்படம்

ஒரு தேசம் அன்னிய ஆக்கிரமிப்புக்குட்படும் போது அதன் உண்மையான சரித்திரம் ஆக்கிரமிப்பாளர்களல் திரிவுபடுத்தப்பட்டே வரலாறு என்ற பெயரில் அதன் சந...