Friday, January 15, 2010

ஒரு கங்கண சூரிய கிரகணம்.........

               

ஒவ்வொரு முறையும் சூரிய கிரகணம் என்று பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் எல்லாம் செய்தி செய்தியாக காட்டும்போது நான் நினைப்பதுண்டு எப்போதாவது எனக்கு இதை பார்க்க கிடைக்காதா என்று, அது இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்று நினைக்கவில்லை. அதுவும் இந்த நூற்றாண்டின் மிக நீண்ட கங்கண சூரிய கிரகணம், இதற்கு முன் கங்கண சூரிய கிரகணம் 1901ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் திகதி தான் எமது பிரதேசத்தில் பார்க்க கூடியதாக இருந்தது.  இதில் என்ன விசேசம் என்றால் இந்த முறைதான் சூரிய பகவானின் பார்வை எம்பக்கம் திரும்பியிருக்கிறது, முழு சூரிய கிரகணத்தையும் நாங்கள் பாரக்கும் வாய்ப்பு, கிரகணத்தின் பாதையின் மத்திய கோட்டில் யாழ்ப்பாணம், இந்தியாவில் தனுஸ்கோடி நம்ம சென்னை பதிவர்களுக்கு சந்தர்ப்பம் இல்லை.. யாராச்சும் போனீர்களா..?

இப்படி ஒரு சந்தர்ப்பம் இனி வாழ்நாளில் கிடைக்குமோ யாருக்கு தெரியும். . அதுதான் மதிய உணவுக்கு வீடு செல்லாமலே கல்லூரி மைதானத்தில் ஆதர்-சி-கிளாக் நிறுவனத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்வுக்கு சென்று முழுக்கிரகண்ணதையும் பாரத்து படம் எடுத்து ரசித்தேன்.

 

சூரியனையே சுட்டவன் நான் எனது N-73ஆல்

 

 

வீடு சென்றிருந்தால் ஆத்தா அறைக்குள் போட்டு கதவை இழுத்து சாத்தியிருக்கும் பச்சைத்தண்ணீர் கூட கிடைக்காது என்று நினைத்து தான் .. நீங்களும் அப்பிடித்தானே நினைக்கிறீர்கள்..! ஆனால் நடந்ததோ வேறு வீட்டில் எல்லோரும் இரண்டு மூன்று பழைய படச்சுருள்களை ஒன்றாக வைத்து சூரிய கிரகணம்  பாரத்திருக்கிறார்கள். நான் வீடு சென்று எனது வீரக்கதையை அவிழ்த்து விடலாம் என்றால் அமைதியாக வந்தது பதில் தங்கையிடம் இருந்து ‘இஞ்ச நாங்களும் பாத்தநாங்கள் நீ வெடிக்காதையடா …’ பேசாமல் வாயை மூடியபடி வெறுமையாய் கிடந்த வயிற்றை நிரப்ப அம்மா பசிக்குது என்றேன்.

 

இலைகள் போட்ட கோலங்கள்

 

இது ஒரு அபூர்வ காடசி…! கங்கண சூரிய கிரகணம் ஏற்படும்போது மாத்திரம் நீங்கள் இந்த காட்சியை மரங்களின் கீழே காணக்கூடியதாக இருக்கும். அடர்த்தியான மர இலைகளின் இடைவெளிகளால் ஏற்படுத்தப்படும் சின்னஞ்சிறு துளைகள் ஊசித்துளைக்கமரா(Pin hole effect) என்று ஆண்டு ஒன்பதில் படித்திருப்பீரகளே அது போன்று தொழிற்படுவதனால் கங்கண சூரிய கிரகணத்தின் நிழல் கீழே நிலத்தில் வளையம் வளையமாக தோன்றுகிறது.

 

படத்தொகுப்பு..

முழுச்சூரிய கிரகணத்தின் படத்தொகுப்பு இதோ பாரத்து ரசியுங்கள்…

 

 

 

படித்து கிழிக்க..

 

கங்கண சூரிய கிரகணமன்னா என்ன அது எப்பூடி வருது இப்பிடி எல்லாம் யாருக்காச்சும் டவுட் இருக்குன்னா “ஆளை விடுங்கடா சாமி”

நானே லிங்க் கொடுத்திடுறன் தோ.. வீக்கிபீடியா…இங்கு போய் சூரிய கிரகணத்தை பற்றி விலாவாரியாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Solar eclipse,

Solar eclipse of January 15, 2010

NASA ECLIPSE WEB SITE

10 comments:

கன்கொன் || Kangon said...

பகிர்வுக்கு நன்றி தல....

என்னால் பார்க்க முடியாமல் போய்விட்டது.
சரி உங்கட படங்களையாவது பார்த்து மகிழ்நதேன்...
கொழும்பை விட யாழ்ப்பாணத்தில் தெளிவாக இருந்ததாக அறிந்தேன்...

எல்லாம் சரி,
அதென்ன பெருமாள், பகவான்?
என்ன கொடுமை வாசகன் அண்ணா இது?

Subankan said...

பகிர்வுக்கு நன்றி தல....

எனக்குத்தான் பார்ப்பதற்கு சந்தர்ப்பம் வாய்க்கவில்லை

Bavan said...

// பச்சைத்தண்ணீர் கூட கிடைக்காது என்று நினைத்து தான் .. நீங்களும் அப்பிடித்தானே நினைக்கிறீர்கள்..!//

அதே..அதே..

//இஞ்ச நாங்களும் பாத்தநாங்கள் நீ வெடிக்காதையடா//

தொப்பி..தொப்பி...:p

நானும் பார்த்தேன்... நல்லாயிருந்தது என்ன..

சூரியன் ஆறிவிட்டாலும் சுடச்சுட பதிவிட்டிருக்கீங்க...

பகிர்வுக்கு நன்றி அண்ணேஈ;)

கலகலப்ரியா said...

nice one..!

Ramesh said...

நானும் முயற்சித்தேன் போட்டோ முடியல விடியோ வந்திடுச்சு
நாளை பதிவில வரலாம்
போட்டோ அருமை பாலா

vasu balaji said...

:) நல்ல படங்கள்.

vasu balaji said...

வாசு. கம்ப்யூட்டர்ல என்ன டைம் இருக்கு செக் பண்ணுங்கோ. ஜாமம் 00:54க்கு போட்ட பின்னூட்டம் 11:23 காலைன்னு காட்டுது

புலவன் புலிகேசி said...

ஹி ஹி ஹி சூரியன நல்ல சுட்டுருக்கீங்க

புலவன் புலிகேசி said...

ஹி ஹி ஹி சூரியன நல்ல சுட்டுருக்கீங்க

புல்லட் said...

ஆசுப்பதிரில பேசண்டுகளைப் பாக்கிறவிட்டுட்டு றோட்டில நிண்டு வாயப்பாத்தா நாடு எப்படி உருப்படும் ?

சும்மா பகிடிக்கு.. அருமையன பதிவு.. நானும் இலைகளை அவதானித்்தேன்.. எம் நிழல்கள் கூட போட்டோ சொப்பில் எடிட் பண்ணியது போல ப்ளேராக தெரிந்தது..

உறுமி-ஒரு சந்தோஷ் சிவன் திரைப்படம்

ஒரு தேசம் அன்னிய ஆக்கிரமிப்புக்குட்படும் போது அதன் உண்மையான சரித்திரம் ஆக்கிரமிப்பாளர்களல் திரிவுபடுத்தப்பட்டே வரலாறு என்ற பெயரில் அதன் சந...