யாழ் கோட்டை
கண்டது எத்தனை களங்கள்..?
கொண்டது எத்தனை உயிர்கள்…?
சாரி சாரியாக வந்து செல்லும்
சனத்துக்கெல்லாம் …
இடிந்து போன இதன் கற்கள்
ஒவ்வொன்றும்,
பல கதைகள் சொல்லும்..!
…………………………………?
நாங்கள் விளக்கு வைத்து,
கும்பிட்ட கோயில்கள் எல்லாம்
குப்பைமேடு..!
யாழ் கோட்டைக்கு மட்டும் புனரமைப்பு..!
தியாகத்திற்கு கூட அர்த்தம் தெரியாது
இங்கே,
சிதைக்கப்படுகின்றன சின்னங்கள்…
புராதன சின்னமாம்…
யாழ் கோட்டை..!!!
ஆக்கிரமிப்பு சின்னமாக யார் மாற்றியது ..??
அருமை புரியாமல்
அன்று நாங்கள் அழித்தோமாம்….??
இதை சொன்னவர்கள்…
இன்று…
பண்டாரவன்னியனுக்கு
அன்று பறங்கி கட்டிய கல்லறையை
இடித்தார்கள்.!
இது
வீரத்தின் சின்னமாம்…????
ஆக்கிரமிப்பின் அடையாளங்களுக்கு மட்டுமே இங்கு அனுமதி…!
கல்லறைகளுக்கு கூட
காலம் சரியில்லை நாட்டில்
வீரத்தின் மதிப்பு புரிந்து
அன்று 1803 இல்
வீழ்த்தியவனே கல்லறை கட்டினான் - அவன் வீரன்
அதை பேய்களிடம் எதிர்பார்க்க முடியாதுதானே..
நியாந்தான் …
போர் முடிந்து ஊருக்குள் கொஞ்சி குலாவினாலும்
நான் எதிரி என்று சொல்கிறாயா…?
உடைந்து போன இந்த கல்லறையைப்போலவே
உறவு ஒட்டாது என்கிறாயா…?
உண்மையில் எனக்கு…
உடைந்த கோட்டை தான் அழகாய் தெரிகிறது !
எங்கள் கைகளில் வீழ்ந்ததை விளக்கும்..
எங்கள் வீரத்தின் அழகு..!
நாங்கள் ஆடசி செய்ததன் அடையாளம்..!
எத்தனை அடையாளங்கள் அழிக்கப்பட்டாலும்…
நீ தூசு தட்டும்
இடிந்த கோட்டையின் சுவர்கள் சொல்லும்
தமிழ் வீரத்தின் கதை..!
முடிந்தால்….
பெயர்த்து எடுத்து கடலுக்குள் போடு…!
ஒன்று மட்டும் நிச்சயம் நடக்கும்…!
இன்றல்ல… நாளையல்ல… என்றோ…?
இன்னுமொரு நூற்றாண்டில் ….
நீ முற்றுப்புள்ளி வைத்த கதைக்கே
மீண்டும்….
பிள்ளையார் சுழி போடுவாய்…!
5 comments:
அருமை!
வீரம் என்பது அழிப்பதோ அல்லது வெற்றி கொள்வதோ மட்டமல்ல!
அடுத்தவர் மனங்களையும் வெற்றிகொள்வதுதான் - உண்மையான வீரம்!
அது எவருக்குமே இருப்பதாக எனக்குப் படவில்லை.
மிகவும் சிறப்பான படங்களும் அதர்க்குத் தகுந்த வர்ணனைகளும் அருமை . பகிர்வுக்கு நன்றி !
தியாகத்திற்கு கூட அர்த்தம் தெரியாது
இங்கே,
சிதைக்கப்படுகின்றன சின்னங்கள்…
உண்மைதான். நீ facebook இல் போட்ட படத்தை பார்த்தவுடனே இந்த வலி எனக்கும் தோன்றியது.
மிகவும் நன்றாக இருக்கின்றது.. உணர்வுபூரமான வரிகள்..
வரிகள் உள்ளக்குமுறல்களால் சுண்டி எழுப்புவையாக இருந்தன.அருமையான கவிப்படைப்பு.வாழ்த்துக்கள்
Post a Comment