Sunday, May 23, 2010

யாழ் செம்மண் பூமியும் தென்னந்தோப்புகளும்..

யாழ் மண் ஒரு வளம் நிறைந்த பூமி இந்த வளத்திற்கு பிரதானம் இதன் செம்மண் தறையும் நிலத்தடி நீரும்தான். யாழ்ப்பாணத்தின் நகரப்புறத்தை தாண்டி வெளியில் உலாவினால் இந்த செம்மண் நிறைந்த தோட்ட வெளிகள் கண்களை நிறைக்கும். நான் நண்பர்களுடன் ஊர்  சுற்றும் போது அந்த காட்சிகளை  என் கையிலிருந்த புகைப்படக்கருவியினால் [N73 – வாழ்க நொக்கியா] சுட்டு தள்ளியிருந்தேன் இதோ !! நீங்களும் ரசிக்கலாம்.

தாவரங்கள் செழித்து வளர்வதற்கு தேவையான அத்தனை தகுதிகளையும் கொண்டது இந்த மண்.  எல்லா இடங்களிலும் இது இருப்பதில்லை, குறிப்பாக யாழ் நகரை அண்டிய பகுதிகளில் தோட்டப்புறங்களில் இருந்து இந்த செம்மண்ணை கொண்டுவந்து நிரப்பித்தான் வீடுகளில் பூக்கன்றுகளோ வீட்டுத்தோட்டங்களோ வைக்கமுடியும் இல்லாவிடில் மரம் ஒரு முளம் கூட உயராது.

அழகான தோட்டம் நடுவிலே கிணறு அந்த கிணறு வெட்டிய இடம் கூட வீணாகாமல் கிணற்றை சுற்றி தென்னை மரங்கள்..  இளைப்பாற நிழல் தாகத்திற்கு இளநீர் பசிக்கு சுரண்டி தின்ன வழுக்கல்… படுக்க தென்னோலை. இதைவிட என்ன வேண்டும் ..?

உன்னை பெத்த நேரம் ஒரு தென்னம்பிள்ளைய வைச்சிருக்கலாம் எண்டு ஆத்தா திட்டுவதன் அர்த்தம் புரிகிறதா????

இந்த சிவப்பு எவ்வளவு அழகு… இந்த படத்தை பாரக்கும் போது… 

நல்ல மழையில் ஓர் நாள் நானும் இந்த மண்ணும் ஒன்றாக நனைந்து ஊறவேண்டும் …சதக்கு புதக்கு என்று அந்த சகதியில் குதித்தாடவேண்டும் ….  அந்த சிவப்பாக நானும் மாறவேண்டும் .. என்று தோன்றுகிறது…

வெங்காயம் !!! வெங்காயம் !!! வெங்காயம் !!! வெங்காயம் !!! வெங்காயம் !!!

தப்பா நினைச்சிடாதீங்க !!! உங்களை சொல்லல !! வெங்காயம் பயிரிட்டிருகிறார்கள் என்று சொன்னேன்….கீழே பாருங்கள்…ஒரே தென்னம்புள்ளையபற்றி எத்தனை பந்தி எழுதுவது முடிந்தால் வெங்காயத்தை பற்றி ஒரு ஐந்து வசனம் பின்னூட்டத்தில் போடுங்கள் பார்க்கலாம்…!!!

அத்தனை படங்களிலும் அமைதியாக பின்னே இருந்து அழகுபடுத்தும் நீல வானம், திட்டு திட்டான வெண்பஞ்சு மேகங்கள், இடையில் நான் குறிப்பிடாமல் போனதால் கோபமாயிருக்கும் மரவெள்ளி தோட்டம், இந்த செம்மண் தறை, தென்னை மரங்கள், நான் படம் பிடிக்கும் போது பைத்தியமோ என்றெண்ணி என்னை..தம் கையிலிருந்த மண்வெட்டியால் அடிக்க வராமல் இருந்த உழவப்பெருமக்கள், முக்கியமாக முன்னால் இருந்து வண்டியை மெதுவாகவும் பலசமயங்களில் நிறுத்தியும் ஓட்டிய என் நண்பன் …. இறுதியாக இவற்றை பார்த்து ரசிக்கும் நீங்கள் எல்லாருக்கும நன்றிங்கோ…...

இது உங்களுக்கு பிடிச்சிருந்தால் உங்கள் ஆதரவைப்பொறுத்து இன்னும் பல படங்கள் கைவசம் இருக்கு தருகிறேன்…

12 comments:

anuthinan said...

அண்ணா நியமாகவே உங்களுக்கு நல்லா ரசனை ! நல்ல அழகான படங்கள்!

//உன்னை பெத்த நேரம் ஒரு தென்னம்பிள்ளைய வைச்சிருக்கலாம் எண்டு ஆத்தா திட்டுவதன் அர்த்தம் புரிகிறதா????//

திட்டும்போதே புரிந்துவிட்டது அண்ணா! :p (எங்கள் ஊரிலும் தென்னை பிரபலம்)


//நல்ல மழையில் ஓர் நாள் நானும் இந்த மண்ணும் ஒன்றாக நனைந்து ஊறவேண்டும் …சதக்கு புதக்கு என்று அந்த சகதியில் குதித்தாடவேண்டும் …. அந்த சிவப்பாக நானும் மாறவேண்டும் .. என்று தோன்றுகிறது//

ஒவ்வொருவருக்கும் அவரவர் ஊர் மேல் இருக்கும் ஆசை அண்ணா!

//வெங்காயத்தை பற்றி ஒரு ஐந்து வசனம் பின்னூட்டத்தில் போடுங்கள் பார்க்கலாம்…!!!//

1- வெங்காயம் அழகான ரோஸ் நிறத்தில் இருக்கும்.

2- இதை சமைப்பதற்கு மட்டுமின்றி திட்டுவதுக்கும் பயன்படுத்துவர்.

3-வெங்காயத்தை பயன்படுத்தி காச்சலை வரவழைக்க முடியும். இதன் மூலம் பாடசாலைக்கு செல்வது தவிர்க்கப்படும்.

4- வெங்காயம் பெரிதாகவும்,சிறிதாகவும் காணப்படும்.

5- வெங்காயம் நிள்ளவெளி எனும் ஊரில் பிரபலம்! நானும் அந்த ஊரில் பிறந்த வெங்காயம்தான்

//மேலதிக படங்களையும் தாருங்கள்//

balavasakan said...

எல்லாம் சரி அனு ஒரு வெங்காயத்தை பற்றி ஒரு முக்கியமான விடயத்தை தவறவிட்டு விட்டீர்கள் வெங்காயம் கோவிக்கபோகுது ஊரிலயும் பிரபலம் எண்டிறியள் கவனம்...ஹா..ஹா..ஹா..

vasu balaji said...

ஆஹா! பச்சையும் செம்மையும் நீலமும் அழகோ அழகு.நன்றி வாசு! இன்னும்..

கலகலப்ரியா said...

superb pics.. :((

கன்கொன் || Kangon said...

நல்லாயிருக்கு..... :)))

// 1- வெங்காயம் அழகான ரோஸ் நிறத்தில் இருக்கும்.

2- இதை சமைப்பதற்கு மட்டுமின்றி திட்டுவதுக்கும் பயன்படுத்துவர்.

3-வெங்காயத்தை பயன்படுத்தி காச்சலை வரவழைக்க முடியும். இதன் மூலம் பாடசாலைக்கு செல்வது தவிர்க்கப்படும்.

4- வெங்காயம் பெரிதாகவும்,சிறிதாகவும் காணப்படும்.

5- வெங்காயம் நிள்ளவெளி எனும் ஊரில் பிரபலம்! நானும் அந்த ஊரில் பிறந்த வெங்காயம்தான் //

ROFL....

சந்தனமுல்லை said...

படங்கள் அழகு!

வெங்காயம் பற்றிய குறிப்புகள் :-)))

archchana said...

படங்கள் அழகு!

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

மிக அருமை

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

Subankan said...

நல்லாயிருக்கு..... :)))

Bavan said...

N73 வாழ்க... 2000+ படங்கள் இதுவரை சுட்டுத்தள்ளியதாக அறிந்தேன்..ஹிஹி

Bavan said...

N73 வாழ்க... 2000+ படங்கள் இதுவரை சுட்டுத்தள்ளியதாக அறிந்தேன்..ஹிஹி

புலவன் புலிகேசி said...

ரொமப அழகா இருக்கு பாலா...

உறுமி-ஒரு சந்தோஷ் சிவன் திரைப்படம்

ஒரு தேசம் அன்னிய ஆக்கிரமிப்புக்குட்படும் போது அதன் உண்மையான சரித்திரம் ஆக்கிரமிப்பாளர்களல் திரிவுபடுத்தப்பட்டே வரலாறு என்ற பெயரில் அதன் சந...