Saturday, July 17, 2010

ஹொலிவூட் சினிமா பேசும் அமெரிக்க அரசியல்…

“டேய் இன்னொரு விசயம்டா ..”

“என்னடா சொல்லு..!”

“நான் இன்னிக்குதான்டா அவதார் பாத்தன்..”

“பாத்திட்டியா.!! நான் சொல்லல நல்ல படம்டா..”

“நல்ல படந்தான்.. நான் கன நாளைக்கு பிறகு புளொக்ல எழுதலாம்னு இருக்கேன்”

“அதுக்கு…”

“  எப்பவோ வந்த படத்தபத்தி இப்ப எழுதினா என் இமேஜு டமேஜ் ஆகிடுமோன்னு பயமாருக்கடா.. :( ”

“அப்பிடியா!!  உன்ட கொம்பியூட்டர்லதானேடா ஏராளம் இமேஜ் வைச்சிருக்காய் அதச்சொல்றியா அதென்னண்டறா டமேஜ் ஆகும்…”

டக் .. டொக்..

 

காதில் கொழுவி இருந்த ஹெட் செட் கழண்டு கீழ விழுந்தது கூடவே என் மூக்குந்தான்..   

அப்ப….எல்லாரும் அவதார் எப்பவோ பாத்திட்டீங்க நான் நேற்றுத்தான்பாத்தேன் சிரிக்காதீங்க.. எனக்கு கோவம் வரும்.. இதுக்கு மேலயும் சிரிக்கிறவங்க இங்க வந்து இங்கிலீசு படம் போடுறதுக்கு ஒரு தியேட்டர் கட்டுங்க பாஸ் புண்ணியமா இருக்கும்.  இவளோ நாளா  நான் அவதார் பாக்குறதுன்னா ஒரிசினல் டிவிடிலதான் பாக்குறதுன்னு ஒரு முடிவோடதான் இருந்தேன். யார் செஞ்ச புண்ணியமோ என் நண்பன் ஒருத்தன் Avtar HD ன்னு சொல்லி pendrive இல கொண்டுவந்து தந்தான் பரவால்லன்னு என் 17’திரையில் தான் பாத்தேன். எனக்கு படத்தின் பிரமாண்டங்கள் வண்ணமயமான பண்டோரா உலகம் என பலரும் சொல்லி மண்டை புளித்துவிட்டிருந்ததால் சிறிய ஒரு வியப்பு குறி தான் முகத்தில் விழுந்திருந்தது.

 

ஆனால் என்னை ஆச்சரியப்பட வைத்த விடயம் ஹாலிவூட்டின் பிரம்மா என சொல்லபடக்கூடிய புகழ்பெற்ற இயக்குனர் ஜேம்ஸ்கமருனே தனது தாய் நாட்டின் டவுசரை கழற்றிய விதம்தான். நிறைந்து கிடக்கும் அத்தனை பிரமாண்டங்களும்  அழகும் மசாலாத்தனமும் படத்தை ஒரு பொழுதுபோக்கு படமாக மாற்றி இருந்தாலும் அவதார் அமெரிக்காவுக்கு ஒரு பாடம் என்றே சொல்லவேண்டும். அமெரிக்கா என்பதன் அர்த்தமே படத்தின் கதாநாயகனின் வாயினூடாக ஒரே ஒரு வசனத்தில் வந்திருக்கிறது..

 

This is how it’s done..

When people are sitting on the shit that you want, you make

them your enemy and you are justified in taking it..

 

இதற்கு ஈராக் ஒரு மிகச்சிறந்த உதாரணம் என்பது நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. அடுத்தது ஆப்கானிஸ்தான் பங்குசந்தை அச்சுதன் தன் பதிவு ஒன்றில் எழுதி இருக்கிறார். ஆப்கானிஸ்தானில் ஏராளமான கனியவளங்கள் பூமிக்கடியில் புதைந்து இருப்பதை அமெரிக்கா மோப்பம் பிடித்திருக்கிறதாம் விசயம் சீனாவுக்கும் கசிந்து இப்போ இரண்டுக்கும் பெரிய இழுபறி எவன் அதிகம் கொள்ளை அடிக்கிறதெண்டு துலைஞ்சுது ஆப்கானிஸ்தான்.!!

அமெரிக்காவின் இந்த போக்கிரித்தனத்தை உலகே அறியும் என்றாலும் அது ஜேம்ஸ்கமரூனால் சொல்லப்பட்டதுதான்   பெரியவிடயமாக படுகிறது.

இன்னொரு வகையில் அமெரிக்காவுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் ஒரு விடயத்தை அந்த பிரமாண்டமான மரம் என்கிற குறியீட்டின் மூலம்  ஜேம்ஸ் கமரூன் சொல்லி இருக்கிறார் மனிதர்கள் எல்லோரும் பூமியில் மரங்களின் நிழல்களில் தான் வாழ்கிறீர்கள் அவைதான் பூமி வெப்பமயமாதலை தடுத்து உயிர்வாழ ஏற்ற சூழலை பூமியில் பேணுகின்றன உங்கள் தாயை நீங்களே கொல்லதீர்கள்..!

 

See the world we came from..

There is no green there..

They killed their mother..

 

இப்படி எல்லாம் சொல்வதற்கு பூமி அழிந்த பிறகு அமெரிக்காகாரன் வேணுமானால் எங்காவது கிரகத்தில் இருப்பான்.. நீங்களல்ல!! அப்பாவி ஆசிய மக்களே..!!

 

என்னைப்பொறுத்தவரை அவதார் ஒரு பிரமாண்டமான மசாலப்படம் என்பதையும் தாண்டி சிறுபான்மை மக்களின் உணர்வுகளை பேசுகிற ஒரு படமாக தெரிந்தது. ஜேம்ஸ் கமரூன் தனது நாவிகளின் மூலமாக ஒவ்வொரு இனமக்களும் தங்கள் எள்ளளவு பூமி என்றாலும் அந்த மண்ணையும் காலாச்சாரத்தையும் எவ்வளவு நேசிக்கிறார்கள்.. வல்லரசுகள் என்று சொல்லப்படுகின்ற பிணந்தின்னி கழுகுகள் போட்டி போட்டுகொண்டு பணத்திற்காக இந்த அழகிய பூமியை எப்படி சுடுகாடாக மாற்றி இருக்கிறார்கள்.. கொண்டிருக்கிறார்கள்.. என அமெரிக்காவுக்குள் இருந்தே சொல்லியிருப்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஒரு தலைகுனிவு என்றே நான் கருதுகிறேன்.

அரசியல்:தொடரும்

7 comments:

Subankan said...

Welcome back :)

நல்ல பதிவு. தொடரப்போகும் இந்தப் பதிவின் எழுத்து வடிவத்துக்காக வெயிட்டிங் (குரல் வடிவம்தான் கேட்டாகிவிட்டதே ;) ).

Bavan said...

அந்த இமேஜ் மாட்டர் -ஹீஹீஹீ..:P

நான் இன்னும் அவதார் பாக்கல so டோன்ட் வொர்ரி தல..;)
welcome back boss..:)))

Jana said...

வாங்க பாலவாசகன்...நீண்ட இடைவெளிக்கு பின்னர் தங்கள் பதிவை காத்திருந்து படித்தது சந்தோசம். பறவாய் இல்லை நேற்று இரவுகூட அவதார் பற்றிக்கதைத்தோம். பயபுள்ள இதைப்பத்தி மூச்சுக்கூட விடல.
பறவாய் இல்லை வரும்போது மிகப்பிரமாண்டமாகத்தான் வந்திருக்கின்றீர்கள்.
வாழ்த்துக்கள்

கன்கொன் || Kangon said...

மீள வரவேற்கிறேன். ;)

நான் இன்னும் பாக்கலயே?
இதுக்கெல்லாம் கவலைப்படப்படாது.... :)))

படம் பாத்திற்றுச் சொல்லுறன். :P

anuthinan said...

அடடடா இவ்வளவு இருக்குதா???

மறுபடி ஒரு தடவை உங்களுக்காக படம் பார்த்து விட்டு கருத்து போடுகிறேன் அண்ணா !!!

யோ வொய்ஸ் (யோகா) said...

wel come back

Kiruthigan said...

அனிமேஷள் பண்ணாத அவதார் ஒண்டு நடிச்ச படம் பாத்திருப்பியள் தானே!
அதில ஆரம்ப காட்சில அது கடலுக்க இருந்து வர்ற சீன ஜேம்ஸ் கேமருனால கூட உருவாக்கேலாது..
அப்படிப்பட்ட “என்னது காந்திய சுட்டுட்டாங்களா“ உலகத்தில அவதார் லேட்டா பாத்தது ஒரு மேட்டரே இல்லை...

வழக்கம் போல பதிவு அருமை அண்ணா..

உறுமி-ஒரு சந்தோஷ் சிவன் திரைப்படம்

ஒரு தேசம் அன்னிய ஆக்கிரமிப்புக்குட்படும் போது அதன் உண்மையான சரித்திரம் ஆக்கிரமிப்பாளர்களல் திரிவுபடுத்தப்பட்டே வரலாறு என்ற பெயரில் அதன் சந...