Tuesday, July 27, 2010

கண்டறியாத காதல் II

தண்ணீர்  குடித்து…

என் தாகம்தனை தீர்த்து…

தலை நிமிர்ந்தபோது…

உன் வண்ண முகம் பார்த்து 

மனசுக்குள் இன்னுமொரு தாகம்…

அருந்த தருவாயா???

உன் அழகிய இதழ்களை!

 

பக்கத்து பிள்ளையார் கோவில்…

படிக்கல் போல உன் இதயமடி!

என் சித்தம் சிதறுதேங்காயானது…

உன் திருமுகத்திறகு முன்னால்!

 

பட்டாம் பூச்சி செட்டைகள் கணக்காய்… 

படபட என உன் இமைகளின் துடிப்பில்!

என் இதயம் துடிக்க மறந்து போக…

நான் உயிருடன் இறந்து போனேன்!

 

ஆணாய் பிறந்து   என்ன பயனென்று

ஆதங்கம் எனக்கு,

உனை அணைத்திருந்த ஆபரணங்கள்…

எள்ளி நகைப்பது போல் தோன்றியது!

 

என் அணுக்கள் அத்தனைக்கும்,

உன்னை பிடித்து போய்…

அந்த முதல் ஸ்பரிசத்துக்காய்…

இப்போதே சாகும் வரை உண்ணாவிரதம்!!!

சத்தியமாய் எனக்கு,

சில நாளைக்கு சாப்பாடு பிடிக்காது!!!

 

ஒரு கணம் கூட..

உனை பார்க்கவில்லை என்றால்,

இமைகளை திறக்கமாட்டேன்…

என்கிறது கண்கள்!

உனை ரசிக்கவில்லை என்றால்,

இனி கவிதை எதுவும் படிக்காதே…

அடம்பிடிக்கிறது  அன்பு மனசு!

 

உன் அபரிதமான அழகின்

ஆதாரம் என்ன…?

உன் தோள்களில்,

கலைந்து கிடந்த கேசங்களா ?

அலங்கோலமாக  உடலில்,

நீ அள்ளி வீசியிருந்த ஆடைகளா ?

அந்த அலட்சியமான பார்வையா ?

பாப்பையா லியோனி

பட்டிமன்றம் நடத்தி…

முடிவு சொல்லியது மூளை…

அலங்காரத்தில் இல்லாத அழகு

எதுவென்று தெரியாத

சில மூடப்பெண்களுக்கு

நீ முன்மாதிரியாம்…

 

பத்து நொடிக்குள்,

ஒரு பாரதமே எழுதவைக்கும் அழகு!

கோலத்தை அளவெடுத்து..

மனதில் புள்ளி போட்டுகொண்டு…

தண்ணீர் குவளையை கொடுத்தேன்.

அவள் கரங்களில்..

“டலீர்..”

பூமியும் இதயமும் சேர்ந்து அதிர

திடுக்கிட்டு நிமிர்ந்தேன்

காணவில்லை அவளை

……………………

முன்னால்…

காற்றில் மெதுவாக கலைந்துகொண்டிருந்த

கடதாசிப்பக்கங்களில்…

கிறுக்கியிருந்தது

causes of cardiac failure

01. @#$%^&*//

02. )(*&^%$#@!

03.)!(@*#&%^& …….

10. &$*&$##

பத்தோடு பதினொன்றாக எழுதினேன்

11.கண்டறியாத காதல்…என்று

பக்கத்தில் இருந்த நண்பன் கேட்டான்

என்னடா பகல்கனவா என்று…?

19 comments:

கன்கொன் || Kangon said...

:-)))

// causes of cardiac failure
01. @#$%^&*//
02. )(*&^%$#@!
03.)!(@*#&%^& …….
10. &$*&$##
பத்தோடு பதினொன்றாக எழுதினேன் 11.கண்டறியாத காதல்…என்று
பக்கத்தில் இருந்த நண்பன் கேட்டான் என்னடா பகல்கனவா என்று… .//

அழகு.... :))
வாழ்த்துக்கள்...

Ramesh said...

11 - அடிச்சான் லெவன்.. ஆப்பு தான்டி.... அங்கேயுமா...
ரசித்தேன் பாலா
//என் சித்தம் சிதறுதேங்காயானது…//
//காற்றில் மெதுவாக கலைந்துகொண்டிருந்த கடதாசிப்பக்கங்களில்… கிறுக்கியிருந்தது causes of cardiac failure//

anuthinan said...

சூப்பர் அண்ணே!! அதுவும் பல இடங்கள் பல உண்மைகள்!!!!

எனக்கு பிடித்து இருக்கிறது!!!

/பத்தோடு பதினொன்றாக எழுதினேன் 11.கண்டறியாத காதல்…என்று பக்கத்தில் இருந்த நண்பன் கேட்டான் என்னடா பகல்கனவா என்று…//

இதுதான் இன்றைய நிலைமையோ???

வாழ்த்துக்கள் அண்ணா!!!

Subankan said...

அருமை டாக்டரே :)

நான் கண்டு அறியாத காதலைப்பற்றி ஒருகவிதை. கடைசியிலும் ஏதோ காடியக் எண்டு போட்டு காட் இயக்கத்தையே கேட் பண்ணிட்டீங்களே :)

Bavan said...

//பத்தோடு பதினொன்றாக எழுதினேன்

11.கண்டறியாத காதல்…என்று

பக்கத்தில் இருந்த நண்பன் கேட்டான்

என்னடா பகல்கனவா என்று…?//

ஹா..ஹா... ரசித்தேன்
கவிதை நல்ல இருக்கு தல..
ரொம்ப நாளா இந்த பக்கம் காணல அதுக்கு இதுதான் காரணமோ..:P

vasu balaji said...

இரவெல்லாம் தூங்காம இப்படி மனச அலக்கழிச்சிட்டு வகுப்புல தூங்கினா இப்புடித்தான் வரும் கனவு. நல்லாருக்கு வாசு:)

ARV Loshan said...

பல வரிகளை ரசித்தேன்..
இடை செருகலாக இல்லாமல் இயல்பாக வந்திருக்கின்றன..
உண்மையான உணர்வுகலாக் இல்லாமல் இப்படிக் காதல் கவிதையில் கொட்டாது என அறிந்தேன்.. உண்மையா டாக்டர்?

கடைசி வரியில் கவிஞர் மருத்துவர் ஆயிட்டீன்களே. :)

கௌதமன் said...

ரொம்ப நல்லா இருக்குங்க...

யோ வொய்ஸ் (யோகா) said...

டாக்குத்தரையாவுக்கு காதல் வந்துடுச்சோ?

வந்தியத்தேவன் said...

இது என்ன மருத்துவக் காதலா?

maruthamooran said...

////உன் அபரிதமான அழகின்
ஆதாரம் என்ன…?
உன் தோள்களில்,
கலைந்து கிடந்த கேசங்களா ?
அலங்கோலமாக உடலில்,
நீ அள்ளி வீசியிருந்த ஆடைகளா ?
அந்த அலட்சியமான பார்வையா ?
பாப்பையா லியோனி
பட்டிமன்றம் நடத்தி…
முடிவு சொல்லியது மூளை…////

நல்லா பீல் பண்ணிறீங்க பொஸ். 'ரப்னே பனாடி யோடி' பார்த்த தாக்கம் தெரிகிறது.

balavasakan said...

@கங்கொன்
நன்றி நன்றி...

@றமேஸ்..

அங்கேயுமா என்டால் உங்கே என்ன நடக்குது...றமேஸ்..

@அனு, பவன்,

பதிவு எழுதுறத விட பதில் போடுறது எவ்வளவு கரைச்சல் ன்னு புரியவைச்சிட்டிங்கடா...

@சுபாங்கன்
உப்புடி பொய் எல்லாம் சொல்லப்படாது..

balavasakan said...

@வானம்பாடி
ஐயோ !! மாட்டிகிட்டேனே.. அப்டில்லாம் கிடையாதுங்கையா..இது வெறும் புனைவு..

@லோசன் அண்ணா
நீங்க அறிஞ்சா பொய்யா இருக்குமா சாரி !! இந்த விசயத்தில மட்டும் பொய்ன்னு வச்சுக்குங்க..

@கௌதமன்
நன்றி கௌதமன்...

balavasakan said...

@யோ..
பிரதர் கண்டபடி புரளிய கிளப்பபடாது..அதெல்லாம் நமக்கு கிட்ட அண்டாது

@வந்தியண்ணா
அப்பிடியோ வச்சுக்கொள்ளுங்கோ..

@மருதமூரான்
அப்டி எல்லாம் இல்லை சும்மாதான் எண்டா நம்பவா போறீங்க......

VELU.G said...

ரொம்ப நல்லாயிருக்குங்க

காதல் உருகி உருகி பொழிஞ்சிட்டீங்க

Jana said...

அடடா... என்ன திடீர் என்று காதல்-கவிதை??? ம்ம்ம்...நடக்கட்டும். கவிதைகள் அந்தமாதிரித்தான். ஆனால் செயற்கைத்தனம் என்றுதானே சொல்லவேண்டும்! உயிரோட்டமானது என்றால்??? நீங்கள் காதல் வயப்பட்டதை ஒப்புக்கொள்ளவேண்டும்!!!

balavasakan said...

@வேலு
வருகைக்கு நன்றி.. ஆனா உருகினமாதிரில்லாம் இல்ல

@ஜனாண்ணா
உங்கள் கேள்விக்கு பதில் நேரே சந்திக்கும் போது சொல்றேன்

Unknown said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)

Kiruthigan said...

: )
: )
: )

உறுமி-ஒரு சந்தோஷ் சிவன் திரைப்படம்

ஒரு தேசம் அன்னிய ஆக்கிரமிப்புக்குட்படும் போது அதன் உண்மையான சரித்திரம் ஆக்கிரமிப்பாளர்களல் திரிவுபடுத்தப்பட்டே வரலாறு என்ற பெயரில் அதன் சந...