Saturday, November 27, 2010

முகம் பத்திரம்..

இந்த உலகம் நாளொரு வண்ணமும் பொழுதொரு புதினமுமாக இருக்கிறது ! உதட்டோரம் சிரிப்பை ஏற்படுத்திய பல விடயங்கள் அடுத்த சில ஆண்டுகளிலேயே ஏதோ ஒரு வகையில் நிஜமாகி எங்கள் வாயை அடைத்து புருவத்தை உயர்த்திவிடுகின்றன !

Face Off படம் பார்த்திருப்பீர்கள்  முதல் பாதியில் வில்லனாக வரும் நிக்கொலஸ் கேஜ் ஹீரோவின் மூஞ்சியை மாற்றிகொண்டு பின்பாதியில் ஹீரோ ஆகிவிடுவார் பார்க்கும் போது வெள்ளைக்காரன் விடுகிற ரீலுக்கு ஒரு அளவே இல்லை என்று  ஒரு எண்ணம் வந்தாலும் அருமையான திரைக்கதையும் அழகான காட்சிஅமைப்புகளும் ஸ்டைலிசாக எடுக்கப்பட்டிருந்த சண்டைக்காட்சிகளும் face off எனக்கு பிடித்த படங்களின் பட்டியலில் இருக்க காரண்ம.

படத்தில் இரண்டு முறை ஏதோ முகமூடி மாற்றி கொள்வதுபோல நிகொலஸ் கேஜ் மூஞ்சி மாற்றப்படும்..! அப்போது வந்த சிரிப்பை இப்போது வியப்பாக மாறியிருக்கிறார்கள் Dr Joan Pere Barret ம்   30 வைத்தியர்களும் !

face_offஉலகத்திலேயே முதன்முதலாக முழுமையான முகமாற்று சிகிச்சையை  ஸபெயினில் வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார்கள்.

சிறுநீரகம் ஈரல் இதயம் மாற்று சத்திரசகிச்சை எல்லாம் நாங்கள் கேள்விபட்டிருப்போம் இதிலும் சிறுநீரக கொள்ளை  ரொம்பவும் பிரபலம்! கண்ட படி சாராயம் குடித்து ஈரலை கருக்குவர்களுக்கு  ஈரல் மாற்று சத்திரசிகிச்சை இப்போது இலங்கையிலும் செய்ய முடியும் என்பதாக கேள்வி..  இதைவிட இதயமாற்று சத்திரசிகிச்சை கூட சாத்தியம்.  ஆனால் முகம் மாற்று சத்திர சிகிச்சையில் மேலதிகமாக பல பிரச்சனைகள்

 

முதலாவது  சிரிப்பு அழுகை நெழிப்பு சுழிப்பு என அத்தனையை மாயஜாலங்கள் செய்வதற்காக முகத்தில் இருக்கும் தசைகளுக்கு வரும் இரத்தநாடி நாளங்கள் மற்றும் நரம்பு வலைப்பின்னல்களை மீள இணைப்பது இது தொழில்நுட்ப சிக்கல்.

இரண்டாவது  உளவியல் பிரச்சனை   ஓரு ஆளின் அடையாளமே முகம் தான்! நீங்கள் இன்று ஹாயாக படுத்துறங்கி  நாளை கண்விழிக்கும் போது உங்கள் முகம் மாற்றப்பட்டிருந்தால் எப்படி இருக்கும். மூஞ்சி புத்தகத்தில ஸ்டேட்டஸ் போடவேண்டிவரும் இதுவரைகாலமும் இப்படியாக உலா வந்த நான் இன்றுமுதல் இந்த புது முகத்துக்கு சொந்தகாரன்.. என்று …  நண்பர்கள்  உறவினர்கள் எல்லாருக்கும் குழப்பம்… மெகா குழப்பம்.. உங்களுக்கு ஒரு காதலி இருந்தால் அதோ கதிதான்..! இது பெரிய உளவியல் பிரச்சனையாகிவிடும்.. முதன் முதலாக பகுதியாக முகமாற்று சத்திரசிகிச்சை செயத பெண்மணி இதனால் மிகவும் பாதிக்கப்பட்டாராம்.

மிஸ்டர் ஓஸ்கார்..

 APTOPIX Spain Face Transplant

இத்தனை பிரச்சனையையும் எதிர்கொள்வதற்காக முதன் முதலாக முழுமையான முகமாற்று சத்திரசிகிச்சைக்கு உட்பட்டவர் எனபதை விட நிர்பந்திக்கப்படவர்..

மிஸடர் ஓஸ்கார்..

இப்படித்தான் அழைக்கிறார்கள் உண்மைப்பெயர் வெளியிடப்படவில்லை..!

30 வயதான அப்பவி விவசாயி வேட்டையாடுவது இவரது விருப்பத்துக்குரிய பொழுது போக்கு. 2005 ஆம் ஆண்டு.. ஏதோ ஒரு மாதம் ஒரு கரிநாளில்  அவருக்கு நேரம் சரியில்லை  வேட்டையில் ஈடுபட்டுகொண்டிருந்த போது தவறுதலாக அவரது துப்பாக்கி அவரது முகத்தையே வேட்டையாடி விட, முகத்தின் முற்பகுதி முழுமையாக சிதைந்து போனது  ஐந்து வருடங்களாக அவரது முகத்தை சீரமைப்பதற்காக 9தடவைகள் பிளாஸ்ரிக் சத்திரை சிகிச்சை செய்யப்பட்டும் அவரது முகத்தை சீரமைக்க முடியவில்லை. அவரது மூக்கும் வாயும்  இருந்த இடத்தில் ஒரே ஒரு துளை மட்டுமே மிச்சம்.. மூச்சு விடுவதற்கும் சாப்பிடுவதற்கும் அவர் மிகுந்த சிரம்பபட வேண்டி இருந்தது.

ஒரே ஒரு வழி  முழுமையான முகமாற்று சத்திரைசிகிச்சை… இதன் மூலம அவருக்கு அத்தனையும் புதிதாக புது மூக்கு புது பற்கள் உதடுகள் தாடை என்பு தசைகள் அத்தனையும் புதிதாக கிடைக்கும்.

ஆனால்

ஒரு புதிய முகம் வேண்டும் ..!

அதனை அவரது உடற் திசுக்கள் ஏற்று கொள்ள வேண்டும் …

அது ஏறத்தாள அவரைப்போலவே இருக்க வேண்டும் !

அதிர்ஸ்டம் அவர்பக்கமும் மருத்துவத்த்துறையின் பக்கமும் இருந்திருக்கிறது

 

இரண்டு வருடங்கள் கடுமையான திட்டமிடலுக்கு பிறகு மார்ச் 30ம் திகதி பார்சிலோனாவில் Vall d'Hebron Hospital இல் Dr Joan Pere Barret ம்   30 வைத்தியர்களும் கொண்ட குழு சத்திரசிகிச்சையை ஆரம்பித்தது. அண்ணளவாக அவரைப்போவே இருந்த யாரோ ஒரு புண்ணியவான்  ஒரு வீதி விபத்தில் உயிரை விட இறந்தவரது உறவினர்களின்அனுமதியுடன்  அவரதுமுகத்தை ஒஸ்காருக்கு மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டது மீண்டும் சிக்கல் மறுமுனையிலிருந்து வந்தது இத்தனை காலமும் அழகாக பார்த்து பழகிய ஒருவரை முகம் இல்லாமல் அடக்கம் செய்வதற்கு யார்தான் சம்மதிப்பாரகள் !!

இறந்தவரின் முகத்தை பிரித்தெடுப்பதற்கு முன்னதாக ரோபோ படத்திற்கு  ரஜினி முகத்தை அச்சடித்து புது மூஞ்சி செய்ததை போல இறந்தவரது முகத்தை பிரதி எடுத்து சிலிக்கானில் ஒரு  புது செயற்கை முகம் ஒன்று தயார் செய்து அவரை அழகாகவே அடக்கம் செய்வதற்கு வழிசெய்தார்கள்.

face-transplant-4

முதலில் முக வழங்குனரிடமிருந்து மேலே நெற்றி முடியோர்ம தொடங்கி கீழே கழுத்து வரையும் பக்கவாட்டாக காதுவரையும் முழுமையாக  மூக்கு தாடை என்புகள் உதடுகள் பற்கள் உள்ளடங்கலாக முகம் ஒரு முகமூடி போல முற்றுமுழுதாக பெயர்த்தெடுக்கப்பட்ட அதே நேரம் ஒஸ்காரினது முகமும் சிதைந்த பாகங்கள் நீக்கப்பட்டு புதிய முகத்தை பொருத்துவதற்காக தயார்செய்யப்பட்டது. இந்த முதலாவது படிமுறை மட்டும் ஐந்து மணிநேரங்கள் நீடித்திருக்கிறது.

இறுதியாக ஒட்டு வேலைதான் அதுதான் கஸ்டமான வேலையும் கூட… the point of no return என குறிப்பிடருக்கிறார்கள்.  புதிய முகத்தின் இரத்த குழாய்கள் ஒஸ்காரின் முகத்துக்கான பிரதான  இரத்தகுழாய்களுடன் இணைக்கபட்ட பின்னர் என்புகளும் தசைகளும்  ஒஸ்காரின் என்புகள் மற்றும் தசைகளுடன்  பொருத்தப்பட்டதுடன் டைட்டேனியம் தகடுகளை பயன்படுத்தி அவருடைய பதிய கன்ன என்புகள் அமைக்கப்பட்டது. இறுதியாக முகத்தின் ஐந்து பிரதான நரம்புகளையும் ஏராளமான சிறிய நரம்புகளையும் ஒஸ்காரின் நரம்புகளுடன் இணைத்திருக்கிறார்கள் இது சாத்தியமாகாவிடில் புதிய முகம் வெறும் உணர்ச்சியற்ற முகமூடியாகத்தான் போயிருக்கும்.

 SPAIN-HEALTH-FACE-TRANSPLANT

ஆனால் மினித குலம் மருத்துவத்துறையில் மீண்டும் ஒரு மைல்கல்லை எட்டியது

சத்திர சிக்கிசை வெற்றிகரமாக முடிந்து சில நாட்கள் கழித்து ஒஸ்கார் தனது புதிய முகத்தை கண்ணாடியில் பார்த்த பொழுது அவர் தன்னை அடையாளம் கண்டு கொண்டதுடன்  சிலமாதங்கள் கழித்து அவர் நீர் அருந்த கூடியதாக உள்ளதாகவும்  நன்றாக சாப்பிடுவதாகவும்  பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் ஒஸ்காருடன் தோன்றிய Dr Joan Pere Barret கூறியிருக்கிறார். அவரது புதிய முகத்திற்கு உண்ரவுகள் திரும்பிவிட்டது  தசைகளும் சிறிது சிறிதாக தொழிற்பட ஆரம்பித்திருக்கின்றன அவரால் தனத்து தாடைகளை புருவங்களை கன்னத்தசைகளை இப்பொழுது அசைக்கமுடிகிறது இன்னும் ஒன்றரை இரண்டு வருட காலப்பகுதியில் அவரது முகம் 90%மான தொழிற்பாட்டை பெற்று விடுமென மேலும் கூறியிருக்கிறார் டாக்டர்.

இப்போது இவருக்கு முப்பது வயது இன்னும் இரண்டு வருடங்கள் கடினமாக கழிந்தால் வாழ்க்கை.. கொஞ்சம் மருந்துகள் அடிக்கடி ஆஸ்பத்திரி என்றாலும்..  அவர் சந்தோசமாக வேட்டையாடலாம் மீன்பிடிக்கலாம் ஓரளவுக்காவது நிம்மதியாக வாழலாம்    விதி இன்னும் இவர் வசம் இருந்தால்.?

Face-Transplant

இது ஆரம்பம் தான் முடிவு எப்படி இருக்குமோ ஒரு வேளை நீங்கள் சாகும் தறுவாயில் மகனுக்கோ மகளுக்கோ  ஒரு விடயம் சொல்லி விட்டு போகவேண்டி இருக்கும் பிள்ளை குஞ்சுகளின்ட முகம் பத்திரம்!!

7 comments:

Jana said...

ஒரு கலக்கலான விடயத்துடன் மீள் வரவு சந்தோசத்தை ஏற்படுத்துகின்றது. "பேஸ்ஓவ்" நியமாகப்போகின்றதுதான் போல!

ஏன் ஹொலிவூட்டில்தான் இருப்பீர்களோ? நம்ம நாசர் நடித்த "முகம்" திரைப்படம் பார்க்கவில்லையா?

அருமையான ஒரு ஸிக்ஸருடன் மீண்டும் துடுப்பாட தொடங்கியுள்ளீர்கள், திரும்ப "டிக்கிளேயர்" பண்ணிவிட்டு போகாம நின்று ஆடுங்கள் 2000 வேரை கொன்றவரே.

ம.தி.சுதா said...

மிகவும் நல்ல ஒரு விடயத்தைப் பகிர்ந்திருக்கிறீர்கள்.... face off படமானது மிகவும் அருமையானது சிவாஜி படமே விளங்காத சராசரி ரசிகனுக்கு அது சிதம்பர சக்கரம் தான்...

இந்த மாற்று சிகிச்சையானது ஒரு பெரிய வெற்றியான நிகழ்வாகும் அனால் இதன் எதிர்வினை விளைவுகள் எத்தனை பிரபலங்களின் வாழ்வில் விளையாடப் போகிறதோ தெரியாது.....

வாழ்ததுக்கள்...


அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
http://mathisutha.blogspot.com/

யோ வொய்ஸ் (யோகா) said...

வெல்கம் பேக் வைத்தியரே!

எனக்கும் முகத்தை மாற்றி வைத்து கொள்ள விருப்பமாயுள்ளது, சாத்தியமா?

Subankan said...

அட!

Bavan said...

வாவ்.. வெல்கம் பக் டாக்டர் அண்ணே..:)

வந்த உடனயே முகத்தையெல்லாம் மாத்திறீங்கள்..:P

மிக நீண்ட மற்றும் கலக்கல் விடயங்கள் அடங்கிய பதிவு தகவல்களுக்கு நன்றி..:)

//அருமையான ஒரு ஸிக்ஸருடன் மீண்டும் துடுப்பாட தொடங்கியுள்ளீர்கள், திரும்ப "டிக்கிளேயர்" பண்ணிவிட்டு போகாம நின்று ஆடுங்கள் 2000 வேரை கொன்றவரே.//

சிக்ஸர்ரா? அரைச்சதம் எண்டும் சொல்லலாம் பெரிய்ய்ய பதிவு..:)
தொடர்ந்து அடியுங்கள் லாராவின் ரெக்கோர்ட்டை உடையுங்கள்..ஹிஹி...:D

கலகலப்ரியா said...

வாசு.. வந்தாச்சா எழுதுறதுக்கு..?!

வெரி குட்... :)

Kiruthigan said...

“ஹலோ வைத்தியரய்யாவா... அண்டைக்கு ரெண்டு பேருக்கு முகம் மாத்தோணுமெண்டு அப்பாய்மென்ட் எடுத்தனாங்கள் இப்ப வந்தா உடன கழட்டி மாதிதிவிடுவியளே..
என்னது கொம்பியூட்டருக்கு RAM மாத்த எண்டு வெளீல வெளிக்கிட்டிட்டியளோ...
என்னண்டா நாளக்கி எங்களுக்கு முக்கியமான வேல இருக்கு காருக்கு கண்ணாடி மாத்தோணும் அது தான் இப்ப முகத்த மாத்திக்கொண்டு சலூனுக்கும் ஒருக்கா போய்வருவமெண்டு பாத்தன் பறவாயில்ல வைக்கிறன்...“

உறுமி-ஒரு சந்தோஷ் சிவன் திரைப்படம்

ஒரு தேசம் அன்னிய ஆக்கிரமிப்புக்குட்படும் போது அதன் உண்மையான சரித்திரம் ஆக்கிரமிப்பாளர்களல் திரிவுபடுத்தப்பட்டே வரலாறு என்ற பெயரில் அதன் சந...